ஜுங்கா.. ‘கஞ்ச’ டானை இந்த 6 காரணங்களுக்காக கட்டாயம் பார்க்கலாம்!

விஜய் சேதுபதியின் ஜுங்கா படம் நாளை ரிலீசாக இருக்கிறது.

சென்னை: கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள ஜுங்கா படம் நாளை ரிலீசாகிறது.

விஜய் சேதுபதி படங்கள் என்றாலே எப்போதும் ரசிகர்களிடையே தனிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும். காரணம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் அவரது படம் இருக்கும் என்பது தான்.

மற்ற ஹீரோக்களில் இருந்து வேறுபட்டு, காதல் காட்சிகளில் கூட இவரது படங்களில் கண்ணியம் இருக்கும். அதேபோல், கதையோட்டத்தோடு கூடிய மெல்லிய காமெடி இழையோடுவதும் விஜய் சேதுபதி படங்கள் தொடர்ந்து ஹிட்டடிக்க ஒரு காரணம்.

அந்தவகையில், நாளை ரிலீசாக இருக்கும் ஜுங்கா படத்தில் காமெடி டாணாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. படத்தில் நிச்சயம் காமெடி தூக்கலாக இருக்கும் என்பது டிரெய்லர் மூலம் தெரிகிறது.

இதோ ரசிகர்களைப் பார்க்கத் தூண்டும் வகையில் ஜுங்கா இன்னும் என்னென்ன அம்சங்கள் இருக்கிறது எனப் பார்க்கலாம்.

டானாக விஜய்சேதுபதி:

டானாக விஜய்சேதுபதி:

ஜுங்காவைப் பார்ப்பதற்கு இதைத் தவிர முதல் காரணமாக வேறு எதையாவது கூறமுடியுமா? மற்ற நாயகர்களைப் போல் லாஜிக்கே இல்லாமல், இப்படித்தான் நடிப்பேன் என்றில்லாமல், தன் இயல்பான நடிப்பால், வித்தியாசமான கதைக்களத் தேர்வால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி. ஒன் மேன் ஆர்மி போல் தான் நடிக்கும் படங்களை, தன் நடிப்பால் தாங்கி, தூக்கிப் பிடிக்கும் நடிகர். இவரது இயல்பான நடிப்பிற்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கோகுலின் அடுத்தபடம்:

கோகுலின் அடுத்தபடம்:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவைத் தொடர்ந்து விஜய் சேதுபதி- இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய படம். தனது முந்தைய படத்திலேயே வித்தியாசமான கதைக்களத்தில் காமெடியை கலந்து கட்டி அடித்திருந்தார் இயக்குநர். எனவே, அதே பாணியில் இப்படத்திலும் வித்தியாசமான காமெடி கதைக்களத்தை எதிர்பார்க்கலாம்.

காமெடி டான்:

காமெடி டான்:

காமெடி டான்களை தமிழ் சினிமா ஏற்கனவே நிறைய படங்களில் பார்த்திருக்கிறது. ஜுங்காவோ காமெடி கஞ்ச டானாக இருக்கிறார். அப்படியானால் டபுள் தமாகா தான். கஞ்ச டான் செய்யும் அலப்பறைகளை ஏற்கனவே டிரெய்லரில் பார்த்துள்ளோம். எனவே, நிச்சயம் கஞ்சத்தனத்தால் மிரட்டி நம்மை சிரிக்க வைப்பார் ஜுங்கா என எதிர்பார்க்கலாம்.

பொள்ளாச்சி டூ பாரீஸ்:

பொள்ளாச்சி டூ பாரீஸ்:

இப்படத்தில் காதலிக்காக, ஏதோ ஒரு இலக்கிற்காக பொள்ளாச்சியில் இருந்து பாரீஸ் செல்கிறார் விஜய் சேதுபதி. தமிழகத்தில் பொள்ளாச்சியில் இருந்து இதற்காக யோகிபாபுவுடன் பாரீஸ் பறக்கிறார் அவர். பொள்ளாச்சி டூ பாரீஸ் என கிராமமும், பாரீன் லொகேசனும் கலந்து கட்டி கண்களுக்கு விருந்தளிக்கும் என நம்பலாம்.

மடோனா:

மடோனா:

இவையெல்லாவற்றிற்கும் மேல் சாயிஷா, மடோனா என படத்தில் இரண்டு நாயகிகள். ஏற்கனவே காதலும் கடந்து போகும், கவண் என விஜய் சேதுபதி- மடோனா இணைந்து நடித்துள்ளனர். அவர்களது கெமிஸ்டரிக்கு மக்களிடையே வரவேற்பு இருப்பதால், இப்படத்திலும் இந்த ஜோடி பேசப்படும். அதோடு இப்படத்தில் புதிதாக சாயிஷாவும் சேர்ந்துள்ளார்.

நச் டயலாக்குகள்:

நச் டயலாக்குகள்:

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில், ‘குமுதா ஹேப்பி அண்ணாச்சி, பிரண்டு பீல் ஆகிட்டாப்புல, கோபால்..' என பல வசனங்கள் பேமசாகின. இன்றளவும் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இப்பட வசனங்கள் தான் பக்கபலமே. அதேபோல் இப்படத்திலும் நச் வசனங்கள் கண்டிப்பாக இருக்கிறதாம். இதனை நமக்கு அளித்த பேட்டியில் விஜய் சேதுபதியே தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாமளும் ஹேப்பி அண்ணாச்சி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X