twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Meena Husband Death: நடிகை மீனாவின் கணவர் மரணம்.. மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதமான சோகம்

    |

    சென்னை : நடிகை மீனாவின் கணவர் புறா எச்சத்தால் ஏற்படக்கூடிய ஒருவித தொற்றால் நுரையீரல்கள் செயலிழக்க கூடிய நிலைக்கு ஆளாகி சிகிச்சைப்பெற்று வந்தார்.

    Recommended Video

    Meena Husband Vidyasagar-க்கு என்ன ஆச்சு? | FilmiBeat Tamil *Celebrity

    நடிகை மீனாவின் கணவருக்கு நுரையீரலை மாற்றும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலையில் தாமதமானதால் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.

    நுரையீரல் பாதிப்பில் தீவிர சிகிச்சையில் இருந்த நிலையில் கோவிட் தொற்றும் ஏற்பட்டது உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

    குழந்தை நடசத்திரமாக அறிமுகமான மீனா
    குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அன்புள்ள ரஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்து பின்னர் ராஜ்கிரண் இயக்கத்தில் என் ராசாவின் மனசில படத்தின் மூலம் கதாநாயகியாய் அறிமுகமானவர் மீனா. 1990 களில் இவர் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினியுடன் எஜமான் படம் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

    நடிகை மீனாவின் கணவர் காலமானார்... நுரையீரல் பிரச்சனையால் உயிர் பிரிந்தது

     பெங்களூரைச் சேர்ந்தவருடன் திருமணம்

    பெங்களூரைச் சேர்ந்தவருடன் திருமணம்

    இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த மீனா பின்னர் சில படங்களில் நடிக்க தொடங்கினார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து த்ரிஷ்யம் 2 நடித்தார், பின்னர் பிரிதிவிராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ப்ரோ டாடி படத்தில் மம்முட்டியுடன் ஜோடியாக நடித்தார்.

     கோவிட் தொற்றும், புறா எச்சம் காரணமாக பரவக்கூடிய கிருமி பாதிப்பும்

    கோவிட் தொற்றும், புறா எச்சம் காரணமாக பரவக்கூடிய கிருமி பாதிப்பும்

    மீனாவின் குடும்பம் பெங்களுர்ருவில் வசித்து வந்தது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி தனது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என மீனா தெரிவித்திருந்தார். 2022 ஆம் ஆண்டின் முதல் வரவு எங்கள் குடும்பத்தில் என தெரிவித்திருந்தார். இதில் வித்யா சாகருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்பு புறா எச்சத்தை சுவாசிப்பதால் பரவும் ஒருவித கிருமியின் காரணமாக நுரையீரலை பாதித்தது கண்டறியப்பட்டது. இதன் பின்னர் சிகிச்சைக்காக கணவருடன் சென்னை வந்தார் மீனா. சென்னை சைதாப்பேட்டையில் தங்கியிருந்து கணவரை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்து வந்தார்.

     செயலிழந்த நுரையீரல்கள்

    செயலிழந்த நுரையீரல்கள்

    ஒரு கட்டத்தில் இரண்டு நுரையீரல்களும் செயலிழந்த நிலையில் மாற்று நுரையீரம் பொருத்தினால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டது. மாற்று நுரையீரலுக்காக பதிவ் உ செய்து காத்திருந்தனர். உறுப்பு தான விதிப்படி நுரையீரல் எளிதில் கிடைத்துவிடாது. அதற்காக பதிவு செய்து காத்திருக்க வேண்டும்.

     மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலை

    மாற்று நுரையீரலுக்காக காத்திருந்த நிலை

    இந்நிலையில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் தனியார் மருத்துவமனை முயற்சி எடுத்தது. கடந்த சில மாதங்களாக உடல் நிலை தேறி வந்த நிலையில் மீண்டும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டது. பின்னர் அது சரியானது. ஆனால் கோவிட் தொற்று பாதிப்பு மீண்டும் அவரது நுரையீரல் பிரச்சினையை தீவிரமடைய செய்தது.

     சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது

    சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது

    இதனால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு ஐசியூவில் எக்மோ சிகிச்சையில் சிகிச்சைப்பெற்று வந்தார். அவரைக்காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 48. நல்ல ஆரோக்கியமுடன் இருந்தவர் புறா எச்சத்தின் கழிவு கலந்த காற்றை சுவாசித்ததால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தது திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     நுரையீரல் மட்டும் கிடைத்திருந்தால் பிழைத்திருப்பார்

    நுரையீரல் மட்டும் கிடைத்திருந்தால் பிழைத்திருப்பார்

    ஜனவரியில் ஏற்பட்ட கோவிட் தொற்று வித்தியாசாகரை கடுமையாக பாதித்து மீண்டாலும் அதனால் நுரையீரல் பாதிப்புக்குள்ளான நிலையில் பலகீனமாக இருந்த அவர் புறா எச்சம் காரணமாக பரவும் கிருமியால் நுரையீரல் முற்றிலும் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அழைத்து வரப்பட்டார். நுரையீரல் செயலிழந்த நிலையில் வேறு நுரையீரலை மாற்றினால் உடல் நலம் தேறலாம் என்கிற நிலையில் மாற்று நுரையீரலுக்காக டோனருக்காக காத்திருந்தனர். ஆனால் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு பலவித விதிமுறைகள் உள்ள நிலையில் டோனருக்காக காத்திருந்த நிலையில் நுரையிரல் கிடைப்பதில் தாமதமானது. தக்க நேரத்தில் நுரையீரல் கிடைத்திருந்தால் வித்யாசாகர் பிழைத்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கும்.

    English summary
    Actress Meena's husband contracted a lung infection while waiting for a replacement lung and died due to its side effects.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X