படப்பிடிப்பில் சிம்புவை திட்டிய ஹரி.. அப்படி என்ன தவறு செய்தார்!

சென்னை: இயக்குனர் ஹரி ஆக்சன் படங்களுக்கு மிகவும் பெயர் போனவர்

ஹரி இயக்கத்தில் வெளியாகும் படங்களின் திரைக்கதை மிக விறுவிறுப்பாக செல்லும் அதனாலேயே அவரது படத்திற்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகமாக இருப்பார்கள்

இந்த நிலையில் கோவில் படத்தில் பணியாற்றும் போது சிம்புவை ஹரி திட்டியதாக பிரபல விமர்சகர் கூறியுள்ளார்.

ஆக்சன் தூக்கலாக

ஆக்சன் தூக்கலாக

பிரஷாந்த் நடிப்பில் வெளியான தமிழ் என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான ஹரிக்கு முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் வெளியான தமிழ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இந்த நிலையில் தன்னுடைய அடுத்தடுத்த இயக்கத்தில் வெளியாகும் படங்களையும் ஆக்சன் தூக்கலாக இயக்க தமிழ் ரசிகர்களுக்கும் அது மிகவும் பிடித்து போனது.

சூர்யாவுடன் தொடர்ந்து படங்கள்

சூர்யாவுடன் தொடர்ந்து படங்கள்

இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள விக்ரம் மற்றும் சூர்யாவுக்கு பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து முன்னணி நடிகராக உயர பெரும் பங்களித்தவர் ஹரி. சூர்யாவுடன் இணைந்து ஆறு, வேல்,சிங்கம் 1,2,3 என தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய ஹரி கடைசியாக அருவா என்ற படத்தில் இருவரும் இணைய இருந்தார்கள் பின் ஒரு சில காரணங்களால் இப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அருண் விஜய்யுடன் முதல் முறையாக

அருண் விஜய்யுடன் முதல் முறையாக

என்னை அறிந்தால் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அருண்விஜய்க்கு அதன் பிறகு வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்று இப்போது தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த நிலையில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போன ஹரியின் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் யானை படப்பிடிப்பு முடிந்து தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.

ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்

ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்

மாநாடு வெற்றியை தொடர்ந்து கொரோனா குமார், பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் சிம்பு, ஹரியின் இயக்கத்தில் கோவில் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். இயக்குனர் ஹரியை பொறுத்த வரையிலும் படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பிளான் படி முடித்து விட வேண்டும் அதில் அவர் மிகவும் கவனமாக இருப்பார். அதில் எந்த சமாதானமும் செய்ய மாட்டார். அதே போல படப்பிடிப்பு தளத்திற்கு அனைவரும் சொன்ன நேரத்தில் கட்டாயமாக படப்பிடிப்பில் இருக்க வேண்டும் என்பதில் மிகவும் ஸ்ட்ரிக்ட்டாக இருப்பார்.

சிம்புவை திட்டுவது போல

சிம்புவை திட்டுவது போல

இந்நிலையில் சிம்பு படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்ந்து லேட்டாகவே வந்தது ஹரிக்கு பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் சிம்பு லேட்டாக வருவதை பார்த்த ஹரி ஒருநாள் சிம்புவுக்கு முன்பாகவே உதவி இயக்குனரை பார்த்து சம்பளம் வாங்கிட்டு தானே வேலை செய்றீங்க, சொன்னா சொன்ன டைம்ல வர மாட்டீங்களா ஷூட்டிங்குக்கு என சிம்புவை திட்டுவது போல ஜாடைமாடையாக திட்டியுள்ளார். அதனை புரிந்து கொண்ட சிம்பு அதன் பிறகு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்து படத்தை முடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X