twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த காரணத்திற்காக அனிருத்தை திருமணம் செய்வேன் - பாடகி ஜோனிதா காந்தி

    |

    சென்னை: இசையமைப்பாளர் அனிருத்தை இந்தக் காரணத்திற்காகவே திருமணம் செய்யலாம் என அரபிக்குத்து புகழ் பாடகி ஜோனிதா காந்தி தெரிவித்திருக்கிறார்.

    விழா ஒன்றில் பேசிய அவர் அனிருத்தை திருமணம் செய்வேன் என்றும், ரன்வீருக்கு கையில் முத்தமிடுவேன் என்றும், சூர்யாவின் தீவிர ரசிகை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணியில், 'மெண்டல் மனதில்' பாடலின் மூலம் தமிழுக்கு அறிமுகமான கனடா நாட்டைச் சேர்ந்த பாடகியான ஜோனிதா, அண்மையில் பீஸ்ட் திரைப்படத்தில் அரபிக்குத்து பாடலைப் பாடினார்.

    ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்ஓடிடி.,யில் ஒளிபரப்பாகும் நயன்தாராவின் திருமணம்...எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

    அனிருத்தை திருமணம்

    அனிருத்தை திருமணம்

    கடந்த வாரம் விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட ஜோனிதாவை நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் பேட்டி எடுத்தார். அப்போது 'கில், மேர்ரி, கிஸ்' என்ற விளையாட்டு விளையாடப்பட்டது. யாரைக் கொல்வீர்கள்? யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள்? யாரை திருமணம் செய்வீர்கள்? என அனிருத், சூர்யா, ரன்வீர் என மூன்று பேரைச் சொன்னார் தொகுப்பாளர். அதற்கு எனது அழகால் பார்வையாளர்களைக் கொல்வேன் என்றும், சிங்கிள் பையனான அனிருத்தைத் திருமணம் செய்வேன் என்றும் ஜோனிதா தெரிவித்தார். மேலும், ரன்வீர் எல்லாப் பெண்களையும் கையில் முத்தமிடுவார் அது போல் தானும் அவரது கையில் முத்தமிடுவேன் என்றும் குறிப்பிட்டார். அதேவேளையில், தான் சூர்யாவின் ரசிகை என்றும் கூறி சாமர்த்தியமாகத் தப்பித்தார் ஜோனிதா.

    தமிழ் தெரியாதவர்

    தமிழ் தெரியாதவர்

    டெல்லியில் பிறந்த பஞ்சாபி பெண்ணான ஜோனிதா காந்தி 9 மாதக் குழந்தையாக இருந்த போதே பெற்றோரால் கனடா நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டவர். கனடா நாட்டில் படித்து வளர்ந்து பட்டம் பெற்றவர். ஜோனிதாவிற்கு தமிழ் பேசத் தெரியாது. ஆனால் 2015-ம் ஆண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓ காதல் கண்மணி படத்தில் 'மெண்டல் மனதில்' என்ற பாடலைப் பாடினார். அதன் பின்னர் தொடர்ச்சியாகத் தமிழில் பல பாடல்களைப் பாடி வருகின்றார். தமிழ் தெரியாவிட்டாலும் பாடலில் தமிழ் உச்சரிப்பு அவ்வளவு இனிமை.

    சத்தத்தை மிமிக் செய்வேன்

    சத்தத்தை மிமிக் செய்வேன்

    ஹிந்தி, பஞ்சாபி பாடல்களைப் பாடுவதில் எனக்கு சிரமம் இல்லை. ஆனால் தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடுவது ஆரம்பத்தில் எனக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இப்படி செய்ய வேண்டும், இப்படி உச்சரிக்க வேண்டும் என கற்றுக் கொடுக்க ஒரு நல்ல குழு எனக்குத் தேவைப்பட்டது. காரணம், நான் தவறாகப் பாடினாலும், கூட சத்தத்தை அப்படியே மிமிக் செய்யும் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். யாராவது என்னிடம் உச்சரிப்பின் வித்தியாசத்தை காட்டினாலும், என்னால் அதை அப்படியே பிடித்துக் கொள்ள முடியும். நான் கடினமாக உழைக்கிறேன். அது எனக்கு உதவுகிறது என பேட்டி ஒன்றில் ஜோனிதா தெரிவித்திருக்கிறார்.

    அழகும் திறமையும்

    அழகும் திறமையும்

    பாடல் திறமை மட்டுமல்ல பார்ப்பதற்கு ஹீரோயின் போல் அழகிலும் மிளிர்கிறார் ஜோனிதா. டாக்டர் படத்தின் 'செல்லம்மா செல்லம்மா' பாடலின் யூடியூப் வெர்சனில் இவரைக் காணலாம். விரைவில் ஆண்ட்ரியா போல் இவரும் திரையில் தலைகாட்டும் வாய்ப்புள்ளது.

    English summary
    Reasons why i will marry Music director anirudh says singer jonitha gandhi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X