ஜக்குபாய் படம் இதனால தான் ட்ராப் ஆச்சு.. கேஎஸ் ரவிக்குமார் சொன்ன காரணம்!

சென்னை: 90களில் தொடர் வெற்றிகளின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கே எஸ் ரவிக்குமார்

ரஜினிகாந்துடன் முத்து,படையப்பா, லிங்கா என இதுவரை மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்

ரஜினிகாந்த் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக இருந்த ஜக்குபாய் திரைப்படம் எதனால் ட்ராப் ஆனது என்ற காரணத்தை தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பகிர்ந்துள்ளார்

 முன்னணி இயக்குனராக

முன்னணி இயக்குனராக

புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கேஎஸ் ரவிக்குமார் அதைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்யம், சூரியன் சந்திரன், நாட்டாமை, நட்புக்காக, பிஸ்தா, பஞ்சதந்திரம் தசவாதாரம் என பல வெற்றிப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர்.

 நாட்டாமை செய்த சாதனை

நாட்டாமை செய்த சாதனை

90களில் தொடர் வெற்றிகளை கொடுத்த கே எஸ் ரவிக்குமார் இளம் தலை முறைக்கு ஏற்றவாறும் படங்களை இயக்க கூடியவர். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ள கேஎஸ் ரவிக்குமார் சரத்குமாருடன் மட்டும் 9 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். அதில் நாட்டாமை திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது.

 ரஜினி நடிப்பில் ஜக்குபாய்

ரஜினி நடிப்பில் ஜக்குபாய்

ரஜினிகாந்த் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் வெளியான முத்து மற்றும் படையப்பா மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது. இந்நிலையில் மூன்றாவதாக இந்த வெற்றிக் கூட்டணி ஜக்குபாய் என்ற படத்தின் மூலம் இணைய இருந்தது. மிக வித்தியாசமான கதை களத்தில் உருவாக இருந்த இப்படம் கடைசியில் ட்ராப் செய்யப்பட்டது. அதன் பிறகு பிரபல பிரெஞ்சு படத்தை ஜக்குபாய் என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்கினார். அதில் நடிகர் சரத்குமார் ஹீரோவாக நடித்திருந்தார்

 ட்ராப் செய்துவிட்டோம்

ட்ராப் செய்துவிட்டோம்

இந்த நிலையில் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜக்குபாய் எதனால் ட்ராப் ஆனது என்ற காரணத்தை பகிர்ந்துள்ளார். ராணா மற்றும் ஜக்குபாய் என ரஜினிகாந்துடன் அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்க தயாராகி வந்தார் கேஎஸ் ரவிக்குமார். அதில் ஜக்குபாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மிரட்டலாக வெளியானது. ரஜினிகாந்த் ஆப்கானிஸ்தான் நபர் போல உடையில் கையில் துப்பாக்கியுடன் இருந்தார். ஜக்குபாய் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் ஜக்குபாய் படத்தின் முதல் எழுதி முடித்துவிட்டு இரண்டாம் பாகத்தை எழுத நினைக்கும் பொழுது கதை நகரவே இல்லை எப்படி எழுதினாலும் பாட்ஷா படக் கதையைப் போல தான் வருகிறது. அதனால் ஜக்குபாய் படத்தை கைவிட்டுவிட்டோம். என கே எஸ் ரவிக்குமார் ஜக்குபாய் படம் ட்ராப் அதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X