twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தை விட ஜோடி நல்லா ஓடிச்சு.. அதற்கு காரணம் இதுதான் !

    |

    சென்னை: ரட்சகன் என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் பிரவீன் காந்தி அடுத்ததாக இயக்கிய திரைப்படம் ஜோடி

    பிரசாந்த்,சிம்ரன்,விஜயகுமார்,நாசர், ஜனகராஜ்,ஸ்ரீவித்யா, அம்பிகா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தனர்.

    ஒரே மாதிரியான கதையாக இருந்தாலும் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தை விடவும் ஜோடி நல்லா ஓடியதற்கான காரணத்தை இயக்குனர் பிரவீன் காந்தி பகிர்ந்துள்ளார்

    பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ரம்யா பாண்டியன்.. இந்த தோட்டா சும்மா தெறிக்குதே!பிக் பாஸ் பிரபலத்துடன் ஜோடி சேர்ந்த ரம்யா பாண்டியன்.. இந்த தோட்டா சும்மா தெறிக்குதே!

     இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில்

    இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில்

    1997ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் ரட்சகன். இப்படத்தை இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கி அறிமுகமானார். ரட்சகன் வெளியானபோது இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றிருந்தது. நாகார்ஜுனா, சுஷ்மிதா சென் நடித்த பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் தயாரித்திருந்தார். இவர் ஏற்கனவே தமிழில் ஜென்டில்மேன் படத்தை தயாரித்தவர். ஏ ஆர் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றது

     ஜோடி

    ஜோடி

    ரட்சகன் கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரவீன் காந்தி காதல் கதையை மையமாக வைத்து எடுத்த திரைப்படம் ஜோடி. 1999 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் சிம்ரன் லீட் ரோலில் நடித்து இருந்தனர். இருவேறு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டுமென முடிவு செய்து ஒருவர் மற்றொருவரின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் நல்ல பெயர் எடுத்து இறுதியில் எப்படி இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதே கதைக்களமாக வைத்து மிக சுவாரசியமாக இயக்கி இருப்பார் பிரவீன் காந்தி . ஜோடி வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ஏ ஆர் ரகுமான் இசையில் ஹிந்தியில் வெளியான சூப்பர் ஹிட் பாடல்களை தமிழில் ரீமேக் செய்ய இருந்த பிரவீன் காந்தி அந்த பாடல்களுக்காகவே கதை ஒன்றை எழுதி ஜோடியாக இயக்கியிருந்தார்.

     இரண்டும் ஒரே மாதிரியான கதை

    இரண்டும் ஒரே மாதிரியான கதை

    இவ்வாறு சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஜோடி படத்தில் விஜயகுமார், நாசர், ஸ்ரீவித்யா,ஜனகராஜ்,அம்பிகா, தாமு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஜோடி உருவான அதே காலகட்டத்தில் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படமும் உருவானது. திரைத்துறையில் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஒரே மாதிரியான கதையில் படங்கள் வெளியாவதுண்டு. அப்படியான சூழலில்தான் பூவெல்லாம் கேட்டுப்பார் மற்றும் ஜோடி என இரண்டும் ஒரே கதை களத்தில் உருவானது.

     ஜோடி தான் நல்லா ஓடிச்சு

    ஜோடி தான் நல்லா ஓடிச்சு

    பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா லீட் ரோலில் நடித்து இருப்பார்கள். 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூவெல்லாம் கேட்டுப்பார் வெளியானது. 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜோடி வெளியானது. இரண்டும் ஒரே மாதிரி கதை களத்தில் எடுக்கப்பட்டு இருந்தாலும் ஜோடி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது பூவெல்லாம் கேட்டுப்பார் அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை அதற்கு காரணம் இரண்டும் ஒரே கதையா இருந்தாலும் அவை எடுக்கப்பட்ட விதம் வித்தியாசமானது என இயக்குனர் பிரவீன் காந்தி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்

    English summary
    Reasons why jodi ran successfully than poovellam kettuppar movie says praveen gandhi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X