யாருயா இந்தாளு... தன் கணவன் ஃபகத் பாசிலை பார்த்து நடிகை நஸ்ரியா மிரண்டதுக்கு காரணம் இதுதானாம்

கேரளா: சினிமாவிற்கு வந்த வேகத்தில் பிரபலமாகி, அதே வேகத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமா வாழ்க்கைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்தவர் நடிகை நஸ்ரியா நாஸிம்.

தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பத்தொன்பது வயதில் கதாநாயகியாக அறிமுகமாகி இருபது வயதில் திருமணம் செய்து கொண்டார்.

மலையாளத்தில் நான்கு, தமிழில் மூன்று, தமிழ்-மலையாளம் பை-லிங்குவலில் இரண்டு என கதாநாயகியாக இரண்டு ஆண்டுகளிலேயே ஒன்பது படங்களில் நடித்துவிட்டார்.

வயது வித்தியாசம்

வயது வித்தியாசம்

பெங்களூரு டேஸ் படத்தில்தான் முதன் முதலில் ஃபகத் ஃபாசிலுடன் நடித்தார். படத்தில் வெறுப்பைக் காட்டும் கணவன் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும், நிஜத்தில் காதலை பற்ற வைத்து ஒரே ஆண்டிற்குள் திருமணத்தையும் முடித்துவிட்டார் ஃபகத். இவர்களது திருமணத்தை இவர்களை விட பெற்றோர்கள்தான் மும்மரமாக நடத்தியதாக கூறியுள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆன சமயம் ஃபகத்துக்கும் நஸ்ரியாவிற்கும் பன்னிரெண்டு வயது வித்தியாசம் உள்ளது என மக்கள் விமர்சித்தனர்.

இணைந்து நடித்த படம்

இணைந்து நடித்த படம்

திருமணத்திற்கு முன்பு பேங்களூர் டேஸ், திருமணம் ஆன பின்பு டிரான்ஸ் என்று இரண்டு படங்களில் மட்டும்தான் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். ஃபகத் ஒரு மெத்தட் ஆக்டர். ஆனால் நான் அப்படி இல்லை, கட் சொல்லிவிட்டால் இயல்பாகிவிடுவேன். ஆனால் ஃபகத்திடம் அது நடக்கவே நடக்காது என்று கூறி ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துள்ளார் நஸ்ரியா.

Bangalore Days & Kumbalangi Nights

Bangalore Days & Kumbalangi Nights

பெங்களூரு டேஸ் படத்தின் ஷூட்டிங்கின் போது, இடைவெளியில் தன்னுடன் கலகலப்பாக பேசுவார் என்றும் அப்படித்தான் காதல் மலர்ந்ததாகவும், மனைவியை வெறுக்கும் தாஸ் கதாப்பாத்திரமாக கேமரா முன்பு நடிக்க அரம்பித்தவுடன், "ஹலோ யாருயா நீ இப்ப இங்க என்ன நடந்துச்சு?" என்று தான் யோசிக்கும் அளவிற்கு கேரக்டராக மாறி விடுவார் என்றும் சில சமயம் வீட்டிலும் அது தொடரும் என்றும் கூறியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து தயாரித்த கும்பலங்கி நைட்ஸ் படத்தில் சைக்கோவாக நடிக்கும்பொழுது, சைக்கோ எல்லாம் செட்டில் மட்டும்தான் இருக்க வேண்டும், வீட்டிற்குள் வரக் கூடாது என்று தான் மிரட்டி வைத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

Recommended Video

தல கூட நடிக்க ஆசை இருக்கு | Nazriya Speech | Naani | Adade Sundara | #Kollywood
மீண்டும் கதாநாயகி

மீண்டும் கதாநாயகி

திருமணமாகி நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கூடே என்கிற மலையாளப் படத்தில் நடிகர் பிரித்விராஜுடன் சேர்ந்து மீண்டும் கதாநாயகியாக நடித்தார். அதன் பின் இப்போது நடிகர் நானியுடன் சேர்ந்து அண்ட்டே சுந்தரனிகி என்கிற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜூன் பத்தாம் தேதி வெளியான இந்தத் திரைப்படம்தான் நஸ்ரியாவின் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X