ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும்...அதை மறுத்த நடிகர் பிரித்விராஜ்.என்ன காரணம் ?
சென்னை: நடிகர் பிரித்விராஜ், விவேக் ஓபராய் மற்றும் சம்யுக்தா மேனன் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் கடுவா. கடுவா என்றால் புலி என்று அர்த்தம்.
Recommended Video
வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல், என் வழி தனி வழி, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய தமிழ்ப்ப் படங்களுடன் சேர்த்து பல மலையாளப் படங்களையும் இயக்கியுள்ள இயக்குனர் ஷாஜி கைலாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
வரும் ஜூலை 7-ஆம் தேதி ஐந்து இந்திய மொழிகளில் இந்தப் படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு நடிகர்கள் பிரித்விராஜ் மற்றும் விவேக் ஒபராய் தீவிரமாக இந்தப் படத்தை புரமோட் செய்கிறார்கள்.

பிரித்விராஜின் நீண்ட இடைவெளி
தமிழ் மக்களுக்கு நன்கு பரிட்சையமாகும் அளவிற்கு நல்ல தமிழ்ப் படங்களில் நடித்து வந்த பிரித்விராஜ், காவியத் தலைவன் திரைப்படத்திற்கு பின்னர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரது கடுவா படம் தமிழில் மொழி பெயர்ந்து வெளியாகிறது. அதே போல் பிரேமம் இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் பல ஆண்டுகளுக்கு பின்னர் இயக்கி பிரித்விராஜ் நடித்துள்ள கோல்ட் படமும் ரிலீசுக்காக காத்திருக்கிறது.

இயக்குநர் பிரித்விராஜ்
தமிழில் நடிக்க முடியாமல் போனதற்கு, பிரித்விராஜ் இயக்குநர் ஆனது கூட காரணமாக இருக்கலாம். ஏனென்றால், நடிகர் மோகன் லாலை வைத்து லூசிஃபர் மற்றும் ப்ரோ டாடி என்கிற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அது மட்டுமின்றி லூசிஃபர் 2 மற்றும் டைசன் என்கிற இரண்டு படங்களை இயக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

ரஜினி பட வாய்ப்பு
லூசிஃபர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் ரஜினிகாந்தின் ரசிகனாக தன்னை முதலில் திருப்தி படுத்தும்படி சரியான கதை அபோதைக்கு இல்லை என்றும், வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்று ஏதோ எடுத்துவிட்டால், ஒரு ரஜினி ரசிகனாக தனக்கே அந்தப் படம் பிடிக்காமல் போய் விடும் என்று வாய்ப்பை மறுத்துவிட்டார். கண்டிப்பாக அவருக்கு ஏற்ற கதை தோன்றினால், அவரை அனுகுவேன் என்று பிரித்விராஜ் கூறியுள்ளார்.

கமல் பாணி
நடிப்பு, இயக்கம் என்பதைத் தாண்டி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்று பன்முகங்களைக் கொண்டவர் பிரித்விராஜ். மலையாளப் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி படங்களை கேரளாவில் விநியோகமும் செய்கிறார். இப்போது, தான் தயாரித்து நடித்திருந்த டிரைவிங் லைசன்ஸ் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்கிறார். இவ்வாறு பல துறைகளில் பணிபுரிவதற்கு நடிகர் கமல் தான் இன்ஸ்பிரேஷன் என்று பிரித்விராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











