சிவகார்த்திகேயனை பாராட்டிய ரெமோ பட இயக்குனர்... எதற்காக தெரியுமா!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது

இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி இருக்க நடிகை பிரியங்கா அருள்மோகன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பெரும் காத்திருப்புக்குப் பிறகு இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்க சமீபத்தில் வெளியான செல்லம்மா செல்லம்மா பாடல் ப்ரோமோவை பார்த்து ரெமோ பட இயக்குனர் சிவகார்த்திகேயனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

டாக்டர்

டாக்டர்

நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படங்கள் என்றாலே வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களும் படத்தை காண திரையரங்குகளில் குவிந்து விடுவார்கள். நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர்

பிரியங்கா அருள்மோகன்

பிரியங்கா அருள்மோகன்

கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்கி இருக்க இளம் நடிகை பிரியங்கா அருள்மோகன் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார் இவர் ஏற்கனவே தெலுங்கில் கேங் லீடர் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்பொழுது தமிழ் சினிமாவில் டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

அக்டோபர் 9ஆம் தேதி உலகமெங்கும்

அக்டோபர் 9ஆம் தேதி உலகமெங்கும்

யோகி பாபு,அர்ச்சனா,தீபா, ஜாரா, வினய் என பிரபலமான நடிகர் நடிகைகள் இதில் நடித்திருக்க சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராக இருந்த டாக்டர் கொரோனா சூழல் காரணமாக ஓடிடியில் வெளியாக தயாராகி வந்தது. இந்த நிலையில் படக்குழு திடீரென முடிவை மாற்றிக்கொண்டு இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளது. அதன்படி டாக்டர் வரும் அக்டோபர் 9ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பாக்யராஜ் கண்ணன் பாராட்டியுள்ளார்

பாக்யராஜ் கண்ணன் பாராட்டியுள்ளார்

முதல் முறையாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் டாக்டராக நடித்திருக்க மருத்துவத்துறையில் உடல் உறுப்பு திருட்டு பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட செல்லம்மா செல்லம்மா பாடல் ப்ரோமோவும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது மேலும் இந்த பாடல் புட்ட பொம்மா பாடல் சாயலிலேயே இருப்பதாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் செல்லம்மா செல்லம்மா பாடல் ப்ரோமோவை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் மீண்டும் எப்போது இணைய உள்ளீர்கள் என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X