சிவகார்த்திகேயனும் சந்தானமும் ஏன் இணைந்து நடிக்கவில்லை.. உண்மை காரணம்!

சென்னை : காமெடியனாக சினிமாவில் அறிமுகமாகி தங்களது திறமையின் மூலம் முன்னணி ஹீரோக்களாக உள்ளவர் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம்

இருவரும் விஜய் டிவியில் இருந்து வந்திருந்தாலும் வேறு வேறு பாதையில் பயணித்த இவர்கள் இன்றுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து பணியாற்றவில்லை

சந்தானமும் சிவகார்த்திகேயனும் இணைந்து பணியாற்றாததற்க்கு இன்றுவரை பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில் உண்மையான காரணம் பற்றி பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

 மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக

மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக

நடிகர் சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி என்று அனைவரையும் வைத்திருந்தாலும் ஆரம்பத்தில் இவர் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் அவ்வப்போது மேடைகளில் பகிர்ந்து வருகிறார். விஜய் டிவியில் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக அறிமுகமாகி பின் தொகுப்பாளராக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் தொகுத்து வழங்கி அதன் பிறகு சினிமாவில் காமெடியனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் பலரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்த இடத்தை எட்டியுள்ளார்.

 தெலுங்கில் நேரடியாக அறிமுக

தெலுங்கில் நேரடியாக அறிமுக

சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு ரசிகர்களையும் மலையாள ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் டாக்டர் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது அதை தொடர்ந்து இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மிக விரைவிலேயே வெளியாக இருக்க அடுத்தது தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகும் புதிய திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது.

 காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு

காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு

சிவகார்த்திகேயன் விஜய் டிவியிலிருந்து திரைத்துறையில ஜொலித்துக் கொண்டிருப்பது போலவே நடிகர் சந்தானமும் விஜய் டிவியில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபாவில் நடித்து புகழ்பெற்றவர். அதன் பிறகு சிம்புவின் மன்மதன் படத்தில் ஒரு சிறிய காமெடியனாக நடித்த சந்தானம் இப்போது தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். மற்றவர்களை தனது கவுண்டர்கள் மூலம் கலாய்ப்பது சந்தானத்தின் தனி ஸ்டைலாக இருக்க காமெடியனாக நடிப்பதை நிறுத்திவிட்டு இப்பொழுது முழு ஹீரோவாக மாறியுள்ளார். சந்தானம் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களும் நல்ல வசூலை பெற்று வருகிறது கடைசியாக வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

 ஈகோ மோதல் தான்

ஈகோ மோதல் தான்

சந்தானம் இதுவரை அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார் ஆனால் விஜய் டிவியில் ஒன்றாக பணியாற்றிய சிவகார்த்திகேயனுடன் மட்டும் இதுவரை எந்த ஒரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. அதற்கு காரணம் இருவருக்குள்ளும் உள்ள ஈகோ மோதல் தான் என கூறப்பட்டாலும் அது உண்மை இல்லை என்பதே நிதர்சனம். இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் விமர்சகருமான சித்ரா லட்சுமணன் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கான சூழ்நிலையும் கதைக்களமும் அமையவில்லை. அதனால் தான் இன்று வரை இருவரும் இணைந்து நடிக்காமல் உள்ளனர் என தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X