ஜெய்பீம் படத்தில் சூர்யா ஏன் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தார் தெரியுமா?
சென்னை : நடிகர் சூர்யா முதல் முறையாக வழக்கறிஞராக ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இப்படத்தை இயக்கி இருக்க சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வரும் நவம்பர் 2 ஆம் தேதி வெளியாக இருக்க ஜெய்பீம் படத்தில் சூர்யா எதற்காக வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.

2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது
தொடர்ந்து தரமான படங்களில் நடிப்பதோடு பல தரமான படங்களை தயாரித்தும் வரும் நடிகர் சூர்யா இப்பொழுது கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கியுள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மணிகண்டன்,ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஷ் , பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

முதல்முறையாக வழக்கறிஞராக ஜெய்பீம் படத்தில்
பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பற்றி பேச உள்ள ஜெய் பீம் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ஏற்கனவே நல்ல வரவேற்பை பெற்றுள்ள சூழலில் இப்படம் வரும் நவம்பர் 2 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. இதுவரை சூர்யா பல கதாபாத்திரங்களின் நடித்திருந்தாலும் முதல்முறையாக வழக்கறிஞராக ஜெய்பீம் படத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது.

கணவரை கண்டுபிடித்து தருமாறு
விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் அப்பாவி பழங்குடியின மக்களில் ஒருவர் பின் வீடு திரும்பவில்லை. எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு நீதிமன்றம் வரை சென்று போராடும் ஒரு பெண்மணிக்கு ஆதரவாக வாதாடும் வக்கீலாக சூர்யா இதில் நடித்துள்ளார்.
Recommended Video

தானே ஏற்று நடிப்பதாக
இந்த நிலையில் சூர்யா ஜெய்பீம் படத்தில் எதற்காக வக்கீலாக நடித்துள்ளார் என்பது குறித்த முக்கிய தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஜெய் பீம் திரைப்படம் 1993ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் கதை என்பது பலரும் அறிந்ததே. இந்த கதையில் நிஜமாகவே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக வாதாடி நியாயம் பெற்றுத் தந்தவர் நீதிபதி சந்துரு என்பவர். நீதிபதி சந்துரு இந்த ஒரு வழக்கு மட்டுமல்லாமல் இது போன்ற பல வழக்குகளுக்கு நியாயத்தின் கட்டுப்பாட்டில் நின்று போராடி வென்று கொடுத்துள்ளார். ஆனால் அவரை பற்றிய தகவல்கள் மக்களை சென்றாடையவில்லை. எனவே நீதிபதி சந்துருவை பற்றி அறிந்த சூர்யா அவரைப் பற்றி அறிந்ததும் இந்த கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிப்பதாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











