ஜனநாயகனுக்கு ஜாதகம் சரியில்லை போல.. பொங்கல் ரேஸில் பொளந்து கட்ட வரும் பிரபாஸ்!

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அடுத்த ஆண்டு தைப் பொங்கலுக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது என்ற கேள்வி கேட்டால் அனைவரது பதிலும், தளபதி விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி என இரண்டு படங்களின் பெயர்களை கூறி இருப்பார்கள். ஆனால் அதன் பின்னர் நடந்த அமலாக்கத்துறை நடவடிக்கைகளால், பராசக்தி படத்தின் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் பொங்கல் ரேஸில் இருந்து வெளியேறியது. இதனால் பொங்கலுக்கு தளபதிதான் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்தபோது, இப்போது, பொங்கல் ரேஸில் பான் இந்தியா ஸ்டாரான பிரபாஸும் களமிறங்கியுள்ளார்.

பிரபாஸ் தற்போது ராஜா சாப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் படக்குழுவின் முடிவுப்படி இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆவது என்றுதான் இருந்தது. ஆனால் படத்தின் சில பல வேலைகள் இன்னும் முடியாததால், படத்தை டிசம்பர் 5ஆம் தேதி திரைக்கு கொண்டு வருவது சிரமம். எனவே படத்தை ஒரு மாதம் பின்னர் வெளியிடலாம் என முடிவெடுத்து, ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் நடிகை மாளவிகா மோகனன் நேரடியாக களமிறங்குகிறார். இந்த படத்தின் மீது அவர் பெரும் நம்பிக்கை வைத்துள்ளார்.

Rebal Star Prabhas The Raja Saab Joins 2026 Pongal Race With Vijay Jana Nayagan
Photo Credit:

பாகுபலி படத்திற்கு பின்னர் பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டார். இவரது நடிப்பில் ஒரு படம் வெளியாகிறது என்றாலே கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை மற்ற படங்கள் கொஞ்சம் தள்ளித்தான் வருகின்றன. இப்படி இருக்கையில், பொங்கல் ரேஸில் அவர் களமிறங்கி உள்ளதால் தெலுங்கு திரையுலகில் வேறு படங்கள் வருவது கொஞ்சம் சிரமம் தான் என்று கூறப்படுகிறது.

இது மட்டும் இல்லாமல் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படங்களான சலார் இந்திய அளவில் ரூபாய் 700 கோடிகளும், கல்கி கிட்டத்த ரூபாய் 1200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது என்றும் கூறப்படுகிறது. பிரபாஸ் வந்தாலே வசூல் மன்னன் என்று பலமுறை நிரூபித்தவர். இப்படி இருக்கும்போது, ராஜா சாப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது என்ற தகவலை, திரையுலகம் மிகவும் பரபரப்பாக பேசி வருகிறது. அதாவது, பொங்கல் ரேஸில் தமிழ்நாட்டில் எப்படி தியேட்டர்கள் ஒதுக்குவார்கள் என்று தெரியவில்லையே.

Rebal Star Prabhas The Raja Saab Joins 2026 Pongal Race With Vijay Jana Nayagan
Photo Credit:

ஒருவேளை ராஜா சாப் படத்தை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தால், ஜன நாயகனுக்கு தமிழ்நாட்டில் குறைந்த அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கும்போது அடுத்த ஆண்டு பொங்கல் கொஞ்சம் பரபரப்பான பொங்கலாக தான் இருக்கும் என்று இப்போதே பேச்சுகள் தொடங்கிவிட்டது. மேலும் சிலரோ, ஜன நாயகனுக்கு ஜாதகம் சரியில்லை போலயே என்று எல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஜன நாயகன் படமும் முதலில் இந்த ஆண்டு ஆக்டோபரில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X