Raja Saab: பிரபாஸ்க்கு அடுத்த ஹிட் ரெடி.. மிரட்டும் புது லுக்.. ராஜாசாப் படத்தின் போஸ்டர் ரிலீஸ்!

ஹைதராபாத்: இந்திய சினிமா என்றால் அது இந்தி சினிமா தான் என இருந்த மாயை தற்போது தென்னிந்திய சினிமாக்கள் உடைத்து வருகின்றது. அதில் பல கலைஞர்களுக்கு முக்கிய பங்கு இருந்தாலும், தெலுங்கு சினிமா உலகில் இருந்து மிகவும் முக்கியமாக பார்க்கப்படும் நடிகர்கள், இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் என பலர் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் பிரபாஸ்க்கு தனி இடம் உண்டு என்றே கூறவேண்டும். அப்படியான நடிகரான பிரபாஸ்க்கு இன்று 45வது பிறந்த நாள். இந்நிலையில் அவரது நடிப்பில் உருவாகிவரும் ராஜாசாப் படத்தின் போஸ்டரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.

நடிகர் பிரபாஸ் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அப்போது அவரது வயது 24. தனது 24 வயதில் இருந்து நடிக்கத் தொடங்கிய பிரபாஸ் கடந்த 22 ஆண்டுகளில் 23 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். வெறும் 23 படங்களில் மட்டும் நடித்து இந்திய சினிமா மட்டும் இல்லாமல் உலக சினிமாவையே தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் என்றால், அவரது கதைத்தேர்வு, அதற்கேற்ற உழைப்பு மற்றும் அர்பணிப்பு என அனைத்துமே புலப்படும்.

prabhas rajasaab prabhas birthday

தனது ஆரம்பகால சினிமாவில் காதல் படங்களில் நடித்து வந்த பிரபாஸ் அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அஜித் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் தெலுங்கு ரீ மேக்கில் நடித்து தன்னை ஒரு முழுமையாக ஆக்‌ஷன் கதாநாயாகனாக மாற்றினார். இவரது 15வது படமான ரிபெல் இவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததால், ரிபெல் ஸ்டார் என அழைக்கப்படுகின்றார்.

உழைப்பு: கடந்த 2015ஆம் ஆண்டில் வெளியான பாகுபலி முதல் பாகம், 2017ஆம் ஆண்டு வெளியான பாகுபலி இரண்டாம் பாகம் என இந்த இரண்டுப் படங்களும் தெலுங்கு சினிமாவைக் கடந்து மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவைக் கடந்தும் இவரை அடையாளம் காட்டியது. இந்தப் படத்திற்காக இவர் செலுத்திய உழைப்பு அனைத்திற்கும் பலன் மேல் பலன் கிடைத்தது. இதனால் இவரது சம்பளம் உயர்ந்தது மட்டும் இல்லாமல், இந்தியாவே உற்று நோக்கும் நடிகராக மாறினார். பாகுபலி வசூல் ரீதியாக ரூபாய் 2000 கோடிகளைக் கடந்து வசூல் செய்தது.

prabhas rajasaab prabhas birthday

கோடிகள்: : இவரை நம்பி நூற்றுக்கணக்கான கோடிகளைக் கொட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருந்தது. இவரது நடிப்பில் பாகுபலிக்குப் பின்னர் அதிக பொருட்செலவில் உருவான படமாக சலார் வெளியானது. சலார் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் அடி வாங்கினாலும், இந்தப் படத்தின் இரண்டாம்பாகம் படக்குழுவுக்கு லாபத்தை பலமடங்காக மாற்றிக்கொடுக்கும் என கூறப்படுகின்றது. அதேபோல் கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் கல்கி 2898 ஏ.டி. இந்தப் படம் கிட்டத்தட்ட 600 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இப்படம் வசூல் ரீதியாக 1200 கோடிகளைக் கடந்து வசூலித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு அல்லது 2026ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

prabhas rajasaab prabhas birthday

ராஜாசாப்: இவர் இன்று தனது 45வது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூபாய் 100 கோடிகளில் இருந்து ரூபாய் 200 கோடிகள் வரை சம்பளமாகப் பெறுகின்றார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர் நடிப்பில் உருவாகி வரும் ராஜாசாப் படத்தின் போஸ்டரரை படக்குழு வெளியிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில், "ஹாரர் தான் புதிய நகைச்சுவை" என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் போஸ்டரில் வயதான கதாபாத்திரத்தில் பிரபாஸ் உள்ளார். கையில் சுருட்டுடன் காணப்படும் அவர் பார்க்கவே மாஸான லுக்கில் உள்ளார். இந்தப் படம் திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. படத்தினை மாருதி இயக்குகின்றார். பீப்பிள் மீடியா பேக்ட்ரி தயாரிக்கின்றது. இப்படத்தில் இவர் இருவேறு தோற்றங்களில் நடிக்கின்றார்.

படங்கள்: இந்தப் படம் மட்டும் இல்லாமால், இதையடுத்து சலார் 2, கல்கி 2898 ஏ.டி படத்தின் இரண்டாம் பாகம், அனிமல் படத்தின் இயக்குநர் சந்தீப் வங்காவுடன் ஸ்பிரிட் ஆகிய படங்களில் வரிசையாக கமிட் ஆகியுள்ளார். ராஜாசாப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X