கொல மாஸ்.. கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில்.. பிரபாஸ் நடிக்கும் சலார்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் எப்போது வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Recommended Video

KGF 2 Teaser ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது - Filmibeat Tamil

கேஜிஎஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்.

கேஜிஎஃப் சாப்டர் 2

கேஜிஎஃப் சாப்டர் 2

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி உள்ள கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வரும் ஜூலை மாதம் 16ம் தேதி ரிலீசாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. பான் இந்திய படமாக கேஜிஎஃப் சாப்டர் 2 உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ள நிலையில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் சலார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபாஸ் படம்

பிரபாஸ் படம்

கேஜிஎஃப் இயக்குநர் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கேஜிஎஃப் சாப்டர் 2 படம் வெளியாகி மிரட்ட உள்ள நிலையில், அடுத்ததாக 'பாகுபலி' புகழ் பிரபாஸை வைத்து சலார் படத்தை இயக்கி வருகிறார் பிரசாந்த் நீல். பிரம்மாண்டமான ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

ரிபெல் ஸ்டார் பிரபாஸ்

ரிபெல் ஸ்டார் பிரபாஸ்

பாகுபலி படத்தின் மூலம் பாலிவுட் ஹீரோக்களை வசூல் ரீதியாக பின்னுக்குத் தள்ளிய ரிபெல் ஸ்டார் பிரபாஸ், அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் இந்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு சலார் படத்தையும் அதனை தொடர்ந்து ஆதிபுருஷ் படத்தையும் தனது ரசிகர்களுக்காக கொடுக்கவிருக்கிறார்.

விஜய்சேதுபதி நடிப்பதாக

விஜய்சேதுபதி நடிப்பதாக

சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து பிரபாஸுக்கு வில்லனாக இந்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியானது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. பாலிவுட்டில் கத்ரீனா கைஃப் படத்தில் விஜய்சேதுபதி கமீட் ஆகி உள்ள நிலையில், சலார் படத்தில் நடிப்பது சந்தேகம் தான்.

ஏப்ரல் ரிலீஸ்

ஏப்ரல் ரிலீஸ்

இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகும் என்கிற அறிவிப்போடு கடந்த ஆண்டு சலார் திரைப்படம் தொடங்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக கேஜிஎஃப் சாப்டர் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியாகவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி சலார் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முரட்டுத்தனமா இருக்கும்

முரட்டுத்தனமா இருக்கும்

கேஜிஎஃப் படத்தை விட இன்னமும் முரட்டுத்தனமா பிரபாஸின் சலார் திரைப்படம் இருக்கும் என இயக்குநர் பிரசாந்த் நீல் அண்மையில் ஒரு பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், சலார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே தி மோஸ்ட் வயலென்ட் மேன் என குறிப்பிடப்பட்டிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X