»   »  எப்டிலாம் கிளம்பி வாராய்ங்க... விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

எப்டிலாம் கிளம்பி வாராய்ங்க... விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil
பல்பு கொடுத்த பிந்து மாதவி | விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

சென்னை : விஜய் சேதுபதி இப்போது போலப் புகழ்பெறாத காலத்தில் அதாவது மார்க்கெட் இல்லாத 6 வருடங்களுக்கு முன்பு 'அகாடா' என்ற கன்னடப் படத்தில் வில்லன் கூட்டத்தில் அடியாளாக நடித்தார்.

இந்தப் படத்தில் வசந்த், நயன கிருஷ்ணா, ரேகா உள்பட பலர் நடித்திருந்தனர். எஸ்.சிவன் இயக்கிய இந்தப் படத்திற்கு தர்மபிரகாஷ் இசை அமைத்திருந்தார். தற்போது இந்தப் படம் 'எடக்கு' என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.

Recent problem for vijay sethupathi

தற்போது விஜய் சேதுபதி தமிழில் முன்னணி நடிகராகியிருக்கும் சூழ்நிலையில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தமிழ்ப் படம் போன்று விளம்பரம் செய்து 'எடக்கு' படத்தை வெளியிடுகிறார்கள்.

விஜய் சேதுபதிக்கு தற்போது இருக்கும் மார்க்கெட்டைப் பயன்படுத்தி அவர் வில்லனின் அடியாளாக சிறிய கேரக்டரில் நடித்த படத்தை அவரது நேரடிப் படம் போன்று வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதனைச் சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஏனெனில், படத்தின் உரிமத்தை வைத்திருப்பவர் எப்படி வேண்டுமானலும் விளம்பரப்படுத்தி வெளியிடலாம். ஆனால், என்னதான் விளம்பரப்படுத்தினாலும், ஓடுகிற படம்தான் ஓடப்போகிறது.

English summary
Vijay Sethupathi played the role of the villain in the Kannada film 'Aghaada'. Now the film is released in Tamil as 'Edakku'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil