தலைவர் படம்னாலே ஜோரு ஜோருதான்... 8 மில்லியனை தாண்டிய டைட்டில் மோஷன் போஸ்டர்

சென்னை : நடிகர் ரஜினி நடிப்பில் அண்ணாத்தே படம் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்த படம் தீபாவளி ரிலீசாக நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு மோஷன் போஸ்டர் சமூகவலைதளங்களில் 8 மில்லின் வியூவ்சை பெற்றுள்ளது.

அண்ணாத்தே படம்

அண்ணாத்தே படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் படம் அண்ணாத்தே. இந்த படத்தில் நடிகைகள் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் அவருடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

இந்த படம் வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அண்ணாத்தே படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போனது. இந்நிலையில் தீபாவளி ரிலீசாக திரையிடப்படவுள்ள இந்த படத்தின் வேலைகளை துரிதப்படுத்த தயாரிப்புக்குழு முடிவு செய்துள்ளது.

டைட்டில் மோஷன் போஸ்டர்

ரஜினியின் 168வது படமான இந்த படத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடன் படத்தின் தலைப்பிற்கான மோஷன் போஸ்டர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. அனைத்து அம்சங்களையும் உள்ளிடக்கி இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்திய அளவில் முதல் சாதனை

இந்திய அளவில் முதல் சாதனை

இந்நிலையில் இந்த தலைப்பிற்கான மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் 8 மில்லியன் வியூக்களை தாண்டியுள்ளது. யூடியூபில் 6 மில்லியன் வியூக்களையும் பெற்றுள்ளது. இந்திய அளவில் இத்தகைய சாதனைகளை செய்துள்ள முதல் டைட்டில் மோஷன் போஸ்டர் இதுவாகும். இதனிடையே, படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X