பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப் போறாங்களாம்.. சொன்னது யார் தெரியுமா? பரபரக்கும் தகவல்!

சென்னை: 'அட்ஜெஸ்ட்மென்ட்' விவகாரம் சமூக வலைதளத்தில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பாலாஜி முருகதாஸுக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுக்கப்பட உள்ளதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

சனம் ஷெட்டிக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஏகப்பட்ட சண்டைகள் நடைபெற்று வருகிறது.

இருவரும் வரம்பு மீறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் வருகின்றனர்.

டுபாக்கூர், தறுதலை சண்டை

டுபாக்கூர், தறுதலை சண்டை

டுபாக்கூர் சண்டையில் ஆரம்பித்து, தறுதலை சண்டை என பாலாஜி முருகதாஸுக்கும் சனம் ஷெட்டிக்கும் இடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வரம்பு மீறிய ஏகப்பட்ட சண்டைகள் நடந்து கொண்டே வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் சனம் ஷெட்டி பாலா மீது தொடுத்த புகார் அப்படியே மூடி மறைக்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

நமட்டுச் சிரிப்பு

நமட்டுச் சிரிப்பு

ஒவ்வொரு வார இறுதியிலும் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது, பாலாஜி முருகதாஸ் நமட்டுச் சிரிப்பு சிரிப்பதாக அவரை மறைமுகமாக சாடி வருகிறார். நிச்சயம் இந்த வாரம் பாலாஜிக்கு சரியான சுளுக்கு இருக்கும் என்றே ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மட்டு மரியாதை இல்லை

மட்டு மரியாதை இல்லை

சுரேஷ் தாத்தா, அர்ச்சனா அக்கா, நிஷா அக்கா, ரியோ ராஜ், ஆரி அண்ணா என ஒவ்வொரு போட்டியாளர்களையும் பிக் பாஸ் வீட்டில் மற்றவர்கள் முறை வைத்து மரியாதையாக அழைத்து வருகின்றனர். பாலாஜி முருகதாஸ் மட்டுமே யாருக்கும் மட்டு மரியாதை கொடுக்காமல் இஷ்டத்துக்கு பேசி வருவதை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

’அட்ஜஸ்ட்மென்ட்’ சர்ச்சை

’அட்ஜஸ்ட்மென்ட்’ சர்ச்சை

நடிகை சனம் ஷெட்டி முன்னதாக பணியாற்றிய மாடலிங் நிறுவனம் குறித்தும், சனம் ஷெட்டி பெற்ற அழகிப் பட்டம் குறித்தும் பாலாஜி முருகதாஸ் டுபாக்கூர் என சொன்னதே சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது சனம் ஷெட்டி ‘அட்ஜஸ்ட்மென்ட்' பண்ணி தான் அந்த பட்டத்தை பெற்றார் என பாலாஜி கூறியதாக சனம் அளித்த புகார் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

பாலாஜிக்கு ரெட் கார்டு

பாலாஜிக்கு ரெட் கார்டு

இந்த விவகாரத்தை விஜய் டிவி புரமோவை டெலிட் செய்து மூடி மறைத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மேலும், சரவணனுக்கு பண்ணியது போலவே பாலாஜி முருகதாஸுக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து வருகிறது.

வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் வீட்டில் இருந்து பாலாஜி முருகதாஸுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பப்பட போவதாக நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளதாக தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதற்காகத் தான் அவசர அவசரமாக பகல் நிலவு சீரியல் நடிகர் அசீமை பிக் பாஸ் களமிறக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே பாலாஜியை இந்த விவகாரம் தொடர்பாக வனிதா விஜயகுமார் கிழித்துத் தொங்கவிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X