ஷங்கருக்காக ராம் சரணை பழிவாங்கும் லைகா?.. இது என்ன பாஸ் நியாயம்.. தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் வருமா?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இன்று சென்னையில், கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியை நடத்த தில் ராஜு திட்டமிட்டுள்ளார். ஆனால், அதே நேரத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை பட விழாவும் நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இந்த பொங்கலுக்கு ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்தை வெளியிட விடாமல் லைகா நிறுவனம் தடுத்து வருவதாகவும் மறைமுகமாக ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

அதற்கு காரணமே இந்தியன் 2 படத்தின் தோல்வி தான் என்றும் இந்தியன் 3 படத்தை ஷங்கர் முடித்துக் கொடுக்காததும் லைகா நிறுவனத்தை பெரிதளவில் கோபத்தில் ஆழ்த்தியிருப்பதாகவும் கூறுகின்றனர்.
கேம் சேஞ்சர் ரிலீஸுக்கு தடை?: மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்துக்கு தடை விதிக்க பெரிய சதியே நடைபெற்று வருவதாகவும் ரெட் கார்டு போடப்பட்டுள்ளதாகவும் ட்வீட் போட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார். ஏற்கனவே அஜித்தின் விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகாத நிலையில், கேம் சேஞ்சர் படமும் வரவில்லை என்றால் அனைத்தும் சிறிய படங்கள் மட்டுமே வெளியாகும் என்கிற நிலையும் ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

என்ன காரணம்?: இந்தியன் 3 படத்தின் இறுதிக்கட்ட பணிகளை ஷங்கர் இன்னமும் முடித்துக் கொடுக்கவில்லை என்றும் அதை முடித்துக் கொடுக்காமல் அவர் கேம் சேஞ்சர் படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்கிற சிக்கலை லைகா நிறுவனம் உருவாக்கியிருப்பதாகவும், உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் ராம் சரண் மற்றும் தில் ராஜு தலைமையில் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அனைத்தும் சரியானால் தான் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை ஆரம்பிக்கும் என்கின்றனர்.
சங்கடத்தில் ஷங்கர்: கேம் சேஞ்சர் படம் வெளியாகி வெற்றியடைந்தால் தான் இயக்குநர் ஷங்கர் அடுத்து தமிழில் வேள்பாரி படத்தை அவர் நினைத்தது போல பிரம்மாண்டமாக இயக்க முடியும் என்கிற சூழலும் உள்ளது. தமிழ்நாட்டிலேயே கேம் சேஞ்சர் வெளியாகவில்லை என்றால் ஷங்கரின் அடுத்த படத்துக்கும் சிக்கல் தான் என்கின்றனர். இந்தியன் 3 படத்துக்கு இன்னும் கொஞ்சம் ஷூட்டிங் பாக்கி உள்ளதாகவும் அதற்கான நிதியை லைகா ஒதுக்கினால் தான் படத்தை முடிக்க முடியும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











