தயாரிப்பாளருடன் சண்டை! அஜித் பாதியிலே போயிட்டாரு! நான் அந்த படத்தில் நடித்தேன் - பிரபல நடிகர் பளிச்
சென்னை: கிழக்குச் சீமையிலே, என்னைத் தாலாட்ட வருவாளா ஆகிய படங்கள் மூலம் 90களில் மக்கள் மத்தியில் இடம் பெற்றவர் நடிகர் விக்னேஷ். இவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ள ரெட் ஃப்ளவர் என்ற ஆக்ஷன் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிந்தது. படத்தின் போஸ்ட் புரெடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் தயாரிக்கும் இந்தப் படத்தை விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். இந்த படத்தில் நாசர், ஒய்.ஜி. மகேந்திரன்,மனிஷா ஜஷ்னானி ,ரஷ்ய நடிகர்கள் ஆண்ட்ரே இலபிச்சேவ், மெஹ்தி ஷா, சுரேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானபோது படம் குறித்து இயக்குநரும் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிபுணருமான ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில்,
படம் பற்றி இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறும்போது, " இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் படமாக கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் இரட்டை சகோதரர்களான விக்கி மற்றும் மைக்கேல் கதாபாத்திரங்களில் நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார். இந்த இரண்டு கதாபாத்திரங்களைச் சுற்றியே கதை முழுவதும் நகரும் வண்ணம் உள்ளது.

இந்திய ராணுவத்தில் சேர்வதில் ஆர்வமுள்ள சகோதரர்களாக இவர்கள் உள்ளனர். மூன்றாம் உலகப் போருக்குப் பின், ஐரோப்பிய யூனியன் அதிகாரமிக்க வல்லரசாக உருவெடுத்து, உலக நாடுகள் மீது அதிக வரி விதிக்கிறது. மேலும் படையெடுப்பு அச்சுறுத்தலையும் உலக நாடுகள் மீது விடுத்து, பதற்றமான சர்வதேச சூழலை ஏற்படுத்துகின்றது.

பல மொழிகளில்: இந்த நெருக்கடியான காலத்தினை எதிர்கொள்ள துணிச்சலான ரகசிய நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய அரசு திட்டமிடுகிறது. அதை இரட்டை சகோதரர்கள் எவ்வாறு நிறைவேற்றொ, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிடியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றுகின்றார்கள் என்பது படத்தின் கதை என தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் வெளியாக இருக்கிறது என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

என்னைத் தாலாட்ட வருவாளா: இந்நிலையில் ரெட் ஃப்ளவர் படம் குறித்து தனியார் யூட்டூப் சேனல் ஒன்றிக்கு நடிகர் விக்னேஷ் பேட்டி அளித்திருந்தார். அப்போது பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக என்னைத் தாலாட்ட வருவாளா படத்தில் இருந்து அஜித் விலக என்ன காரணம் என்பது குறித்தும் கூறினார். அப்போது என்னை தாலாட்ட வருவாளா படம் டபுள் ஹீரோ படம். அந்தப் படத்தில் நடிகர் அஜித்தான் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். படத்தின் பாதி சூட்டிங் முடிந்து விட்டது. அதற்குள் அஜித் சாருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்னை ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பாளர் கவுன்சில் வரை பிரச்னை சென்றது.

அஜித் விலகிவிட்டார்: ஆனால் இறுதியில் அஜித் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என உறுதியாகச் சொல்லிவிட்டார். இதனால் படம் கைவிடப்பட்டுவிடுமோ என நினைத்தேன். ஆனால் படத்தின் தயாரிப்பாளர் நாராயணன் சார் படத்தின் கதையை மாற்றச் சொல்லி படத்தினை எடுத்து முடித்தார். அதன் பின்னர்தான் அந்த படத்தில் நடித்தேன்" என பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











