இந்தியன் 2வை தொடர்ந்து விடாமுயற்சி படத்துக்காக இணைந்த பிரம்மாண்ட கூட்டணி.. லைகாவின் புது அப்டேட்!

சென்னை: இந்தியன் 2 படமே கிடப்பில் கிடந்தபோது அதனை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை தரவில்லை என்றாலும், லைகாவுடன் மீண்டும் இணைந்திருக்கிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம். அதன் அறிவிப்பை தான் லைகா நிறுவனம் தற்போது புது விடாமுயற்சி அப்டேட்டாக வெளியிட்டுள்ளது.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், விஜே ரம்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் அடுத்த மாதம் பிப்ரவரி 6ம் தேதி வெளியாகிறது.

vidamuyarchi ajith kumar red giant

அனிருத் இசையில் உருவான சவதீக்கா மற்றும் பத்திக்கிச்சு உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி யூடியூபில் டிரெண்டிங்கில் தாறுமாறு செய்து வருகிறது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தர் குறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

விடாமுயற்சியை வெளியிடும் ரெட் ஜெயன்ட்: தமிழ்நாட்டில் பெரிய படங்களை சமீப காலமாக ரெட் ஜெயன்ட் நிறுவனமும் அதை விட்டால் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக லைகா நிறுவனம் சற்றுமுன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம் தான் உண்மையான பொங்கல் கலெக்‌ஷன் கோலிவுட்டுக்கு வரும் என்றும் தியேட்டர் ஓனர்கள் 2 வாரத்துக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்துக்காக மற்ற புதிய படங்களுக்கு ஸ்லாட் கூட ஒதுக்கவில்லை என்றும் தனுஷின் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் உள்ளிட்ட படங்கள் பிப்ரவரி 14ம் தேதி வெளியாகாமல் 21ம் தேதிக்கு தள்ளிப்போக காரணமும் அஜித்தின் விடாமுயற்சி தான் என்கின்றனர்.

இந்தியன் 2வுக்கு பிறகு: லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மீண்டும் ரெட் ஜெயன்ட் நிறுவனத்துடன் கைகோர்ப்பது ரொம்பவே மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் நடித்த இந்தியன் 2 படத்தை லைகா நிறுவனத்துக்கு உறுதுணையாக நின்று இணைந்து தயாரித்ததே ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்குமா?: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் பெரிய வசூல் வேட்டையை நடத்தாத நிலையில், விடாமுயற்சி திரைப்படம் ஹாலிவுட் தரத்துக்கு எடுக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட நாட்களாக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை இண்டஸ்ட்ரி ஹிட் ஆக்குவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. நிச்சயம் இந்தியன் 2 போல சொதப்பாமல் ரெட் ஜெயன்ட் மற்றும் லைகாவுக்கு அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கைகொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பொங்கல் விடுமுறையை சரியாக தட்டித் தூக்கி இருந்தால் இண்டஸ்ட்ரி ஹிட் நிச்சயம் அடித்திருக்கும் என்றும் பிப்ரவரி மாதத்தில் வசூல் எப்படி இருக்கும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X