ஃபர்ஸ்ட் சிங்கிள் கொடுத்த வைப்... மாவீரன் ரைட்ஸ்ஸை வாங்கும் ரெட் ஜெயன்ட்... ரம்ஜானில் ரிலீஸ்

சென்னை: சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது.

பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடியிருந்த சீன்னா சீன்னா எனத் தொடங்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் கொடுத்த வைப் மாவீரன் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து இந்தப் படத்தின் தியேட்டர் ரைட்ஸை வாங்குவதில் ரெட் ஜெயன்ட் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

 தெறிக்கவிட்ட ஃபர்ஸ்ட் சிங்கிள்

தெறிக்கவிட்ட ஃபர்ஸ்ட் சிங்கிள்

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு நேற்று வெளியிட்டது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடிய இந்தப் பாடல் ரசிகர்களின் வைபை தெறிக்கவிட்டது. "சீன்னா... சீன்னா" எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் கோரியோகிராபி செய்திருந்தார். நூற்றுக்கணக்கான டான்ஸர்களுடன் சிவகார்த்திகேயனும் சும்மா தெறிமாஸாக ஆடி பட்டையை கிளப்பியிருந்தார். குத்து பாடலாக உருவாகியுள்ள மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள், தொடர்ந்து சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

 மாவீரன் தியேட்டர் ரைட்ஸ்

மாவீரன் தியேட்டர் ரைட்ஸ்

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மாவீரன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே தகராறு என சொல்லப்பட்டு வந்தன. ஆனால், ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் அதற்கெல்லாம் பதிலடி கொடுத்தது மாவீரன் படக்குழு. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் டீசர், ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் மாவீரன் தியேட்டர் ரைட்ஸ் வாங்குவதில் கடும் போட்டி காணப்படுகிறதாம்.

 ரெட் ஜெயன்ட் ரிலீஸில் மாவீரன்

ரெட் ஜெயன்ட் ரிலீஸில் மாவீரன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான டான் படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வெளியிட்டது. இந்தப் படம் ஓடாது என நினைத்தேன், ஆனால், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலித்ததாக உதயநிதி ஒரு பேட்டியில் ஜாலியாக கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸான பிரின்ஸ், எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிலையில், மாவீரன் தியேட்டர் ரைட்ஸை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் வாங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறதா?

ரம்ஜான் ஸ்பெஷலாக வெளியாகிறதா?

மாவீரன் இயக்குநர் மடோன் அஸ்வின், மண்டேலா படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளை வென்றிருந்தார். இதனால் மாவீரன் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அடுமட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின் என புது கூட்டணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். இதனையடுத்து மாவீரன் படத்தின் தியேட்டர் ரைட்ஸை ரெட் ஜெயன்ட் வாங்க ரெடியாகிவிட்டதாம். மேலும், ரம்ஜான் ஸ்பெஷலாக ஏப்ரல் மாதம் இறுதியில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகமும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X