twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    12 ஆண்டுகளுக்கு பின் இணைந்த காம்போ...வெந்து தணிந்தது காடு படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் முவீஸ்

    |

    சென்னை :மாநாடு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு சிம்பு மற்றும் வெங்கட் பிரபுவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அதிலும் சிம்பு பற்றிய ஒவ்வொரு தகவலும் டிரெண்டாகி வருகிறது.

    மாநாடு படத்தை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்க சிவந்த வானம் படங்ளை தொடர்ந்து நான்காவது முறையாக கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம்.

    ஹீரோயினாக சித்தி இதானி, அம்மாவாக ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தின் ஷுட்டிங் முடிந்து, ரிலீசிற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    “வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!“வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!

    ரிலீசுக்கு தயாராகும் வெந்து தணிந்தது காடு

    ரிலீசுக்கு தயாராகும் வெந்து தணிந்தது காடு

    ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்ஸ்டர்நேஷனல் தயாரித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. படத்தின் டீசர், பாடல்கள், போஸ்டர்கள் ஆகியன ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

    அமெரிக்கா பறந்த சிம்பு

    அமெரிக்கா பறந்த சிம்பு

    படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாதம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் எதிர்பாராத விதமாக சிம்பு, தனது அப்பா டி.ராஜேந்தரின் ட்ரீட்மென்டிற்காக அமெரிக்கா சென்றுவிட்டார். ட்ரீட்மென்ட் முடிந்த பிறகு தான் படத்தின் வேலைகளில் இறங்க உள்ளதாக சிம்பு கூறி விட்டதால் அவர் தற்போது நடித்து வந்த பத்து தல படத்தின் ஷுட்டிங் வேலைகளும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

    எப்போ ஆடியோ ரிலீஸ்

    எப்போ ஆடியோ ரிலீஸ்

    சிம்பு இம்மாத மத்தியில் தான் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்ப உள்ளார். இதனால் அதற்கு பிறகு பிறகு பத்து தல படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முடிந்ததும் ஆகஸ்ட் மாதத்தில் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது.

    உரிமத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் முவிஸ்

    உரிமத்தை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் முவிஸ்

    இந்நிலையில் விக்ரம் படித்துள்ள கோப்ரா படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழக தியேட்டர் விநியோக உரிமத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் கைப்பற்றி உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் இன்று அறிவித்துள்ளது. ஸ்பெஷல் வீடியோ ஒன்றுடன் இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

     12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

    12 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி

    இதற்கு முன் சிம்பு - கெளதம் மேனன் காம்போவில் உருவான விண்ணை தாண்டி வருவாயா படத்தை 2010 ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் முவிஸ் தான் வெளியிட்டது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கெளதம் மேனன் - சிம்பு கூட்டணியில் தானும் இணைந்துள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

    English summary
    Udhayanidhi Stalin's Red Giant movies announced that they bagged the Tamil Nadu Theatrical distribution of Simbu's Vendhi Thanindhadhu Kaadu. Earlier in 2010, Red giant movies got the distribution of Simbu's Vinnai Thaandi Varuvaya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X