ஆர்யா படத்தின் வெளியீட்டு உரிமையையும் கைப்பற்றிய உதயநிதி... எப்ப ரிலீஸ்னு பாருங்க!

சென்னை : நடிகர் ஆர்யாவின் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சிறப்பான வசூலையும் வரவேற்பையும் பெற்றது டெடி. இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சக்தி சௌந்தர்ராஜன். இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து தற்போது கேப்டன் படத்தை உருவாக்கியுள்ளது.

டெடி படம்

டெடி படம்

நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக், மிருதன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சக்தி சௌந்தரராஜன். இவர் ஆர்யாவுடன் இணைந்து டெடி படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சிறப்பாக கைக்கொடுத்தது. ஆர்யா இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

மீண்டும் இணைந்த டெடி கூட்டணி

மீண்டும் இணைந்த டெடி கூட்டணி

சிறப்பான இந்தக் கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது. இந்த படம் கேப்டன் என்ற பெயரில் உருவாகியுள்ளது. படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சிம்ரன் உள்ளிட்டவர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஆர்யா தயாரிப்பு

ஆர்யா தயாரிப்பு

இந்தப் படத்தை ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனமும் திங்க் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஆர்யா ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் நிற்க அவரது பின்னால் ட்ராகன் ஒன்று இருக்கும் வகையில் போஸ்டர் அமைந்திருந்தது.

வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி

வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தற்போது இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 8ல் ரிலீஸ்

செப்டம்பர் 8ல் ரிலீஸ்

மேலும் படம் செப்டம்பர் 8ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் உதயநிதி, ஆர்யா உள்ளிட்டவர்கள் காணப்படும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

சிறப்பான கதைக்களம்

சிறப்பான கதைக்களம்

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் சயின்ஸ் பிக்ஷனை கதைக்களமாக கொண்டு சிறப்பாக படங்களை இயக்கி வருகிறார் சக்தி சௌந்தரராஜன். இவரது இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த டெடி படம் மிகவும் சிறப்பான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. இவரது ஒவ்வொரு படமும் இப்படித்தான் சிறப்பாக அமைந்து வருகிறது. இந்நிலையில் ஆர்யாவுடன் இவர் இரண்டாவது முறையாக இணைந்துள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X