பீஸ்ட்டை தொடர்ந்து விக்ரம் படத்தையும் கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்..6 மணிக்கு வந்த அப்டேட் இதுதான்
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் ரிலீஸ் உரிமையை கைப்பற்றியது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்.
இயக்குநர் நெல்சன் நாளை என நேற்று ட்வீட் போட்டதில் இருந்து விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக பீஸ்ட் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
ஆனால், கடைசியில் வந்ததோ கமலின் விக்ரம் பட அப்டேட் தான் என்பதால் விஜய் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

கமலின் விக்ரம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் திரைப்படம் வரும் ஜூன் 3ம் தேதி உலகளவில் வெளியாகிறது. இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கேமியோவாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைப்பற்றிய ரெட் ஜெயண்ட்
பீஸ்ட் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் தமிழ்நாடு தியேட்டர் ரிலீஸ் உரிமையையும் கைப்பற்றியுள்ளது என்கிற அறிவிப்பு தான் ஷார்ப்பாக 6 மணிக்கு வெளியாகி உள்ளது.

ஏற்கனவே
இன்று மதியமே ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மிகப்பெரிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வருகிறது என ட்வீட் போட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் அனைவரும் பீஸ்ட் படத்தின் அறிவிப்பு தான் வருகிறதா? என ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது ஏமாந்து போயுள்ளனர்.

நெல்சனுக்கு திட்டு
#NelsonDilipkumar ஹாஷ்டேக்கை போட்டு இயக்குநர் நெல்சனை விஜய் ரசிகர்கள் கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர். கமலின் விக்ரம் படத்தின் அப்டேட் கிடைத்த நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் இணையும் படத்தின் அப்டேட்கள் கரெக்ட்டா வரும் என விஜய் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பெரிய சம்பவம்
விஸ்வரூபம் 2 படத்திற்கு பிறகு கமல்ஹாசனின் படம் தியேட்டரில் வெளியாகாத நிலையில், விக்ரம் படம் இந்த ஆண்டு ஜூன் 3ம் தேதி திரையில் ரிலீசாக உள்ள நிலையில், மிகப்பெரிய சம்பவத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்யப் போவது உறுதி என கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











