அண்ணாத்த படத்தின் தமிழ்நாடு உரிமையை கைப்பற்றிய உதயநிதி ஸ்டாலின்

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி உலகளவில் ரிலீசாக உள்ளது.

Recommended Video

ANNATHE - Official Trailer Review | Rajinikanth, Nayanthara, Siruthai Siva

இந்தப் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது.

அண்ணாத்த படம்

அண்ணாத்த படம்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு சூப்பர்ஸ்டாரின் அண்ணாத்த படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ரசிகர்கள் காத்திருப்பு

ரசிகர்கள் காத்திருப்பு

படத்தின் புக்கிங்கிற்காக தற்போது முதலே ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரமோஷன் பணிகள் இந்த மாதம் துவக்கத்திலிருந்தே துவங்கி ஜரூராக நடைபெற்று வருகின்றன. படத்தின் 4 பாடல்கள், டீசர் நேற்றைய தினம் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெயிலர் வெளியீடு

ட்ரெயிலர் வெளியீடு

நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள படத்தின் ட்ரெயிலர் ஒரே நாளில் 5 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை புரிந்துள்ளது. சூப்பர்ஸ்டார் என்றாலே சாதனைகளுக்கும் வசூலுக்கும் பஞ்சமிருக்காது. இந்நிலையில் படத்தை இயக்குநர் சிவா டைரக்ட் செய்துள்ள படத்தை மேலும் எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கியுள்ளது.

டைரக்டர் சிவா

டைரக்டர் சிவா

அவரது விஸ்வாசம் உள்ளிட்ட முந்தைய படங்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் இந்தப் படத்திலும் எதிரொலித்துள்ளது. படத்தில் அண்ணன் -தங்கை பாசம் முக்கியமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல ட்ரெயிலரிலும் அதற்கான காட்சிகளை காண முடிந்தது.

வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி

வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி

வரும் நவம்பர் 4ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதுகுறித்து ரெட் ஜெயண்ட் மற்றும் சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கங்களில் அறிவிப்பு மேற்கொண்டுள்ளது. இந்த தகவல் தற்போது ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான அரண்மனை 3 படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றி வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அண்ணாத்த படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து சில படங்களையும் ரெட் ஜெயண்ட் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X