ரெட் ஜெயண்ட் மூவீஸின் அடுத்த அதிரடி அறிவிப்பா?..என்னவா இருக்கும்.. குழம்பிய ரசிகர்கள்!

சென்னை : உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட உள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான உதய நிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். இந்த நிறுவனம் சார்பில் விஜய்யின் குருவி, சூர்யாவின் ஆதவன், சிம்புவின் விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்.

சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை உதய நிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூலை வாரிக் குவித்தது.

ரெட்ஜெயிட் மூவிஸ்

ரெட்ஜெயிட் மூவிஸ்

கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகில் வெளியாகும் படங்களை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்து வருகிறது. விஜய்சேதுபதி நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், தனுஷின் திருச்சிற்றம்பலம் என பெரிய நடிகர்களின் படங்களை வெளியிட்டு வருகிறது. அதே போல விக்ரமின் 7 விதமான நடிப்பில் வெளியான கோப்ரா திரைப்படத்தையும் ரெட்ஜெயிட் மூவிஸ்தான் வெளியிட்டு உள்ளது.

பெரிய நடிகர்களின் படங்கள்

பெரிய நடிகர்களின் படங்கள்

அதுமட்டுமின்றி தற்போது தயாராகி வரும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் கூட ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கு தான் செல்லும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நிறுவனம் பல படங்களை வரிசையாக கையில் கைத்துள்ளது. நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளியான 'லால் சிங் சத்தா' திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கான உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அறிவிப்பு

முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் சற்று முன் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று 11 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று வெளியாக இருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் அடுத்த பெரிய படம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

என்னவா இருக்கும்

என்னவா இருக்கும்

ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தி அறிவிப்பு ரஜினியின் ஜெயிலர், கமல்ஹாசனின் இந்தியன் 2, விடுதலை ஆகிய படங்களில் ஒன்றாக இருக்கலாம் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பது இன்று காலை 11 மணிக்கும் தெரிந்து விடும் அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X