ஒன் ரூல்.. நோ லிமிட்ஸ்.. கண்களால் மிரட்டும் கமல்.. இப்பவே புரமோஷனை ஆரம்பித்த ரெட் ஜெயண்ட்!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்திற்கான புரமோஷன் பணிகளை ரெட் ஜெயண்ட் மூவிஸ் தொடங்கி விட்டது.

தமிழ் சினிமாவில் புதிதாக வெளியாகும் பெரிய படங்களின் தமிழ்நாடு தியேட்டர் ரைட்ஸ் உரிமையை பெற்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தற்போது விக்ரம் படத்தின் பிரத்யேக மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு கமல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

கமலின் விக்ரம்

கமலின் விக்ரம்

ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்ரம் படம் உருவாகி வருகிறது. வரும் ஜூன் 3ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில்,, புரமோஷன் பணிகள் இப்போதே ஆரம்பமாகி விட்டன. விக்ரம் படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது அட்டகாசமான மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

ரெட் ஜெயண்ட் மூவிஸ்

விஷ்ணு விஷாலின் எஃப்.ஐ.ஆர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் ராதே ஷ்யாம், விஜய்யின் பீஸ்ட், விஜய்சேதுபதியின் காத்துவாகுல ரெண்டு காதல், கமல்ஹாசனின் விக்ரம் என அனைத்து பெரிய படங்களின் தமிழ்நாடு தியேட்டர் உரிமைகளை பெற்று வெளியிட்டு வருகிறது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.

நோ லிமிட்ஸ்

தற்போது வெளியாகி உள்ள மோஷன் போஸ்டரில் ஒன் ரூல் - நோ லிமிட்ஸ் என போடப்பட்டு கமல்ஹாசன் வெறித்தனமான லுக் கொடுக்கும் போஸ்டருடன் படத்தின் ரிலீஸ் தேதி இடம்பெற்றிருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது குருநாதர் கமல்ஹாசனை வைத்து தரமான சம்பவம் பண்ண காத்திருக்கிறார்.

பிறவிக் கலைஞன்

பிறவிக் கலைஞன்

களத்தூர் கண்ணம்மா, விஸ்வரூபம், தேவர்மகன், ஹேராம், ஆளவந்தான், சத்யா, குருதிப்புனல், இந்தியன், அன்பே சிவம் என கமல்ஹாசனின் மிரட்டலான படங்களின் ஸ்கெட்ச் ஆர்ட்டை போட்டு ரசிகர்கள் பிறவிக் கலைஞன் அவருடைய டெடிகேஷன் மற்றும் ஹார்ட் வொர்க் அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் என கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X