twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது துணிவு படத்துக்கு 900 தியேட்டரா.. அப்போ வாரிசுக்கு? ஒருவேளை உண்மையா இருக்குமோ!

    |

    சென்னை: விஜய்யின் வாரிசு படமும் அஜித்தின் துணிவு படமும் வரும் பொங்கலுக்கு நேரடியாக மோத உள்ளன.

    இந்த முறை போட்டியை அஜித் மற்றும் விஜய் என இருவருமே தவிர்ப்பதாக தெரியவில்லை. அஜித்தின் துணிவு படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், பல பெரிய திரையரங்குகளை லாக் செய்து விட்டதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    விஜய்யின் வாரிசு படத்துக்கு தெலுங்கிலும் தமிழிலும் பெரிய அடி விழுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!

    அவசர கூட்டம்

    அவசர கூட்டம்

    இப்படி இரு முனையிலும் விஜய்க்கு நெருக்கடி வந்த நிலையில் தான் திடீரென பனையூரில் பிரியாணி விருந்து கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார் விஜய் என்றும் இந்த பிரச்சனையை எப்படி களைவது என்பது பற்றி பெரியளவில் ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

    வாரிசுக்காக தான்

    வாரிசுக்காக தான்

    நடிகர் விஜய் ரசிகர்களை பார்த்து ரஞ்சிதமே ஸ்டைல் கிஸ் கொடுத்ததும் வாரிசு படத்தை நினைவு படுத்துவதற்காகத்தான் என்றும் பீஸ்ட் படத்தின் தோல்வி மற்றும் ட்ரோல்களால் ரொம்பவே அப்செட் ஆகி உள்ள விஜய் எப்படியாவது வாரிசு படத்தை வெற்றிப்படமாக மாற்றிவிட வேண்டும் என்கிற முயற்சியில் களமிறங்கி உள்ளார்.

    900 தியேட்டர்கள்

    900 தியேட்டர்கள்

    ஆனால், துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் இடம் ஒப்படைத்து விட்டு அஜித்தும் போனி கபூரும் அப்பாடா என நிம்மதியாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக 900 தியேட்டர்களை இப்பவே துணிவு படத்துக்காக ரெட் ஜெயண்ட் நிறுவனம் லாக் செய்து விட்டதாக அஜித் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர்.

    அப்போ வாரிசுக்கு

    அப்போ வாரிசுக்கு

    அப்போ விஜய்யின் வாரிசு படத்துக்கு வெறும் 300 தியேட்டர்கள் மட்டும் தானா என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன. வாரிசு மற்றும் துணிவு படத்துக்கு சமமான தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டால் தானே போட்டி சரிசமமாக இருக்கும். இது உண்மையா? அல்லது உருட்டா என விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    செவன் ஸ்க்ரீன் என்ன பண்ணுது

    செவன் ஸ்க்ரீன் என்ன பண்ணுது

    வாரிசு படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமையை பெற்ற செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் என்ன பண்ணுது. எத்தனை தியேட்டர்களில் விஜய்யின் வாரிசு படம் வெளியாக போகிறது என்பதை அறிந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் மனதை தேற்றிக் கொள்கின்றனர்.

    புஸ்ஸி ஆனந்த் பிரச்சனை

    புஸ்ஸி ஆனந்த் பிரச்சனை

    இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் புஸ்ஸி ஆனந்த் காலில் ரசிகர்கள் விழுந்த வீடியோ கசிந்து அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், அந்த பிரச்சனையிலும் விஜய் ரொம்பவே அப்செட் ஆகி அவரை எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. என்னடா எந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனையா இருக்கே என ஃபீல் பண்ணி வரும் விஜய் ஆடியோ லாஞ்சிற்குள் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

    செகண்ட் சிங்கிள்

    செகண்ட் சிங்கிள்

    மேலும், ரசிகர்களை ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். அடுத்த சிங்கிளை வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியிடவும் விஜய் தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஞ்சிதமே பாடலை விட இந்த பாடலின் ரீச் அதிகம் இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டு செகண்ட் சிங்கிளை வெளியிட திட்டமிட்டுள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

    English summary
    Udhayanidhi Stalin's Red Giant Movies locked 900 screens for Ajith's Thunivu rumours trending in social media. Vijay and Ajith fans starting Twitter war after the trending by Ajith fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X