சேர்க்காதீங்க.. ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி.. சுரேஷ் காமாட்சி ஆதங்கம்

சென்னை: ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்த செண்பக மூர்த்தி திடீரென ஆதவ் அர்ஜுனாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்த புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவரை கிட்டவே சேர்க்காதீங்க என்றும் ரெட் ஜெயன்ட் செண்பக மூர்த்தியால் தான் உள்பட பல சினிமா குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவையே ரெட் ஜெயன்ட் மூவிஸ் தான் ஆட்சி செய்து வந்தது என்றும் திமுக தோல்வியை அடைந்த நிலையில், இதற்கு பிறகு தமிழ் சினிமா தப்பிக்கும் என பலரும் பேசி வருகின்றனர்.

Red Giant Movies Shenbaga Moorthy and Aadhav Arjuna Meet sparks Controversy

இந்நிலையில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் செண்பக மூர்த்தி ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த நிலையில், தவெகவும் செண்பக மூர்த்திக்கு ஆதரவு கொடுத்தால் மீண்டும் தமிழ் சினிமா சிக்கலை சந்திக்கும் என்கிற அச்சம் சில பிரபலங்களுக்கு எழுந்துள்ளது.

சுரேஷ் காமாட்சி ஆதங்கம்: "அன்பிற்கினிய முதல்வர் அவர்களுக்கு...எம் மண்ணின் மைந்தனாக தாங்கள் முதல்வராக பதவியேற்றிருப்பதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழ் சினிமாவை தனது கைக்குள் மட்டுமே வைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடந்தேறியது. செண்பகமூர்த்தி
போன்ற நபரால் பாதிக்கப்பட்டோர் பலர். அதில் பொருளாதார ரீதியாக பாதிப்புக்குள்ளாகியவர்களில் நானும் ஒருவன்.

மோனோபாலியை உருவாக்கியவர். அம்பதாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சிதைத்தவர். சினிமாவில் தாங்கள் மட்டுமே என போலி பிம்பத்தை உருவாக்கி வாழ்ந்துகொண்டிருப்பவர். மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்கள் வந்த பிறகாவது காலங்கள் மாறும்.. காட்சிகள் மாறும் என நினைத்தால்... இப்படியொரு புகைப்படம். பாதிப்படைந்தோரின் நிலையும் மனநிலையும் கொஞ்ச நஞ்சமல்ல. வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

திரைத்துறை இவரைப் போன்றவர்களால் மட்டுமே இயங்குவதாய் பிம்பம் அமைத்து மற்றவர்களை இழப்பிற்குள்ளாக்குவார்கள். எத்தனையோ தயாரிப்பாளர்கள் அவதியுற்றிருக்கிறார்கள். அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவரது கட்சிக்காரரான நடிகர் இயக்குனர் திரு போஸ் வெங்கட் தனது பேட்டியில் வெளிப்படையாக செண்பகமூர்த்தியின் மோனோபாலி பற்றி பேசியிருப்பார்.

மனதுவந்து கேட்டுக்கொள்கிறேன் இவர்களைப் போன்றவர்களை சரியாக பராமரிக்காமல் போனால் தமிழ் சினிமாவில் பலர் காணாமல் போய்விடுவார்கள். அது தவிர்க்க #செண்பகமூர்த்தி போன்றவர்களை இந்த அரசு தவிர்ப்பது நல்லது. பாதிக்கப்பட்ட ஒருவனாகப் பதிகிறேன். தமிழ் சினிமாவிற்கு ஒரு சுதந்திரக்காற்றை உயிர்மூச்சை தருவீர்கள் என நம்புகிறேன். பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் என் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறேன். இது தொடர்கதையாகக் கூடாது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொணர்கிறேன். தாங்கள் தலைமையேற்றிருக்கும் அரசும்.. அமைச்சரவையும் இத்தகைய சிண்டிகேட் தொழில்முறைகளைத் தடுக்கும் என நம்புகிறேன். மாற்றங்கள் என்பதே நம்பிக்கைதான். நிகழட்டும். திரையுலகம் மீளட்டும்.
@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan" என அனைவரையும் டேக் செய்து தனது ஆதங்கத்தை சுரேஷ் காமாட்சி வெளிப்படுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X