லைனா ரிலீஸ் பண்ணும் ரெட் ஜெயண்ட் மூவிஸ்.. இந்த வாரம் கட்டா குஸ்தி.. அடுத்த வாரம் இதயம் முரளி!

சென்னை: இனிமேல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் படங்களை வெளியிட விடமாட்டோம் என ஆதவ் அர்ஜுனா ஒரு பக்கம் வீர வசனங்கள் எல்லாம் பேசினாலும், மறுபுறம் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களாக ரிலீஸ் செய்து வருகிறது ரெட் ஜெயன்ட் நிறுவனம்.

இந்த வாரம் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து தயாரித்த நிலையில், அந்த படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் திரையரங்குகளில் வெளியிட்டுள்ளது.

Red Giant Movies started big business with Gatta Kusthi 2 and Idhayam Murali

விஜய்யின் கில்லி படத்தின் "அப்படிப்போடு" பாடலையும் விஷ்ணு விஷால் பயன்படுத்தி ரசிகர்கள் மத்தியில் படத்தை பெரிதளவில் வியாபாரம் பார்க்க முடிவு செய்துள்ளார்.

ஆதிக்கம் செலுத்தும் ரெட் ஜெயண்ட்: ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை ஆரம்பத்தில் உதயநிதி ஸ்டாலின் நிர்வகித்து வந்த நிலையில், அவர் அரசியலுக்கு வந்த பிறகு செண்பக மூர்த்தி அதனை நிர்வகித்து வந்தார். அடுத்ததாக இன்பன் உதயநிதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை தற்போது வழிநடத்தி வருகிறார். இட்லி கடை, பராசக்தி, கர உள்ளிட்ட படங்கள் தொடர்ந்து ரெட் ஜெயன்ட் மூலம் ரிலீஸ் செய்யப்பட்டாலும் அந்த படங்கள் வெற்றிப் பெறவில்லை. ஆனால், கட்டா குஸ்தி வெற்றிப் பெற்று விடும் என்கிற நம்பிக்கையுடன் விஷ்ணு விஷால் உள்ளார். இது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்தடுத்து ரிலீஸ்: விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ரெட் ஜெயன்ட் மூவிஸ் பல ஆண்டுகளாக சினிமாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது என்றும் இதற்கு மேல் அது நடக்காது என்றும் அடுத்த 5 ஆண்டுகள் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படங்கள் வராது என்றும் கூறினார். ஆனால், இந்த வாரம் கட்ட குஸ்தி 2 படத்தைத் தொடர்ந்து அடுத்த வாரம் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா முரளி, கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகி உள்ள இதயம் முரளி படத்தையும் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உதயநிதி ஸ்டாலின் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளார் என்றும் கூறுகின்றனர். இதயம் முரளி பட ரிலீஸுக்கு எதிராக சுதா கொங்கரா கொடுத்த வழக்கு என்ன ஆகும்? திட்டமிட்டபடி இதயம் முரளி அடுத்த வாரம் ரிலீஸ் ஆகுமா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் vs கமல்ஹாசன் படம்: மேலும், ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக ரெட் ஜெயண்ட் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பு முடிந்த உடனே அடுத்த ஆண்டு அந்த படம் ஆரம்பிக்கும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X