விஜய்க்கு ஆப்போ ஆப்பு.. ’படையப்பா’ அனுமோகன் பகீர்.. பதறியடித்த ‘ரெட் லேபிள்’ தயாரிப்பாளர்!

சென்னை: படையப்பா படத்தில் பாம்பு புத்துல இருந்து எப்படி பாம்பு எடுத்தீங்க, கடிக்கலையா என பேசி பிரபலமானவர் தான் அனுமோகன். இயக்குநராக சில படங்களையும் இயக்கியுள்ளார். விஜய்யின் மின்சார கண்ணா மற்றும் பத்ரி உள்ளிட்ட படங்களிலும் நடித்த அனுமோகன் ஆருடத்திலும் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறார்.

ரெட் லேபிள் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் அனுமோகன், "அனைத்து டிவி சேனல்களிலும், யூடியூப் சேனல்களிலும் தொடர்ந்து ஒருத்தரை மட்டுமே ஃபோகஸ் செய்து வருகின்றனர். கண்டிப்பாக வரும் தேர்தலில் மாற்றம் வரும். ஆனால், நீங்க நினைப்பது போன்ற மாற்றம் வரவே வராது.

Red Label Producer Lenin open statement about Anu Mohan negative talks about Vijay s Politics

விஜய்க்கு வெற்றியெல்லாம் கிடைக்காது, கண்டிப்பாக ஆப்போ ஆப்பு தான் என அனுமோகன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் அதுதொடர்பாக பேசியுள்ளது வைரலாகி வருகிறது.

விஜய்க்கு ஆப்போ ஆப்பு

தமிழ்நாட்டுக்கு நிச்சயம் மாற்றம் வரும். ஆனால், நீங்க நினைக்கிற மாற்றம் வரவே வராது. எந்த பத்திரிகை எந்த யூடியூப் சேனல் எடுத்தாலும் ஒருத்தரையே சலாம் போட்டு பேசிட்டு இருக்காங்க, அது நடக்கவே நடக்காது, ஆப்போ ஆப்பு கண்டிப்பா இருக்கு என அனுமோகன் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு பேசியது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Red Label Producer Lenin open statement about Anu Mohan negative talks about Vijay s Politics

நானே விஜய் ரசிகன் தான்

அனுமோகன் பேச்சு தீயாக பரவிய நிலையில், ரெட் லேபிள் படக்குழுவினரை சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும் தவெக தொண்டர்களும் அட்டாக் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், அந்த படத்தின் தயாரிப்பாளர் லெனின் "நானும் விஜய் ரசிகர் தான், எங்களுடைய ரெட் லேபிள் பத்திரிகையாளர் சந்திப்பின்போது அனு மோகன் அவர்களிடம் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறிய அனு மோகன் விஜய் அரசியல் பற்றி பேசிய கருத்து பல ஊடகங்களில் இப்போது எதிர்மறையான தாக்கத்தை உண்டாக்கியது.

அவர் பேசிய கருத்துக்கள் முழுவதும் அவர் தனிப்பட்ட கருத்துக்களே. அனு மோகன் அவர்கள் பேசியதில் தயாரிப்பாளர் மற்றும் நடிகராக எனக்கு அதில் எந்த உடன்பாடும் இல்லை, சொல்லப்போனால் நானும் விஜய் ரசிகர் தான் நான்.

ஃபிலிம் சேம்பர் மற்றும் பெப்சி பற்றி நான் பேசிய கருத்துக்கள் அத்தனையும் உண்மையே நான் அதிலிருந்து எப்போதும் பின்வாங்க போவதில்லை.

February 6th திரைக்கு வர இருக்கும் எங்கள் ரெட் லேபில் திரைப்படத்தை பார்த்து மகிழுங்கள் என விளக்கம் அளித்துள்ளார்.

ஏகப்பட்ட என்டர்டெயின்மென்ட்

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை விஜய் அரசியல் களத்தில் இறங்கியிருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ஏகப்பட்ட சர்ச்சைகள், கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. விஜய்யை புகழ்ந்து பாடிய வேல்முருகன் மீது வழக்கு பதியப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X