Don't Miss!
- News
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து தலீபான்கள் கருத்து.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Technology
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாவனி பாவம் நீ என டைட்டில் வச்சு இப்படி பங்கம் பண்றாங்களே.. அழுது காட்டி அசிங்கப்படுத்திய பிரியங்கா!
சென்னை: ரெட் டிவி ப்ளூ டிவி என பிக் பாஸ் போட்டியாளர்களை இரு அணிகளாக பிரித்து பிரேக்கிங் நியூஸ் டாஸ்க்கை கொடுத்து விட்டார் பிக் பாஸ்..
Recommended Video
இமான் அண்ணாச்சி, தாமரை செல்வியை பஞ்சர் ஆக்கிய பிரியங்கா அடுத்ததாக பாவனியையும் சும்மா வச்சு கலாய்த்து விட்டார்.
எப்போதுமே யாருமே தன்னிடம் பேசுவதில்லை என அழுது புலம்பும் பாப்பாவாக பாவனி பிக் பாஸ் வீட்டில் இத்தனை நாட்களாக உள்ளார் என்பது போல பிரியங்கா இமிடேட் செய்தது பாவனி ரசிகர்களையே கடுப்பாக்கி உள்ளது.

நண்பர்கள் எல்லாம் எவிக்டட்
பாவனிக்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த பிக் பாஸ் வீட்டில் நண்பர்களே இல்லை என்பது போல செய்தி உருவாக்கப்பட்டு இருப்பதை பார்த்த ரசிகர்கள் பாவனிக்கு தான் இந்த வீட்டில் நண்பர்கள் அதிகம் என்றும் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வாரமாக எவிக்ட் ஆகி வெளியே போய் விட்டனர் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

அழுது நடித்த பிரியங்கா
பாவனி பற்றி பரிதாபமாக பேசுவது போல அவரை பங்கமாக கலாய்த்து விட்டார் பிரியங்கா. இமான் அண்ணாச்சி, தாமரை செல்வியை வம்பிழுத்த பிரியங்கா கடைசியாக பாவனி போலவும் அழுது காட்டி நடித்து அவரை அசிங்கப்படுத்தி விட்டார். இத்தனைக்கும் சில வாரங்களாக பாவனி அழுவதை நிறுத்தி விட்டார் என்பது கூட அவரது தோழி பிரியங்காவுக்கே தெரியவில்லையா? இல்லை நமக்கு பாவனியின் அழுகாச்சியை போட்டு காட்டவில்லையா? என ராஜு பாய் ரசிகர்கள் நக்கலடித்து வருகின்றனர்.

நண்பர்கள் இல்லை
பாவனியும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டு தனக்கு இந்த வீட்டில் யாருமே உண்மையான நண்பர்கள் இல்லை என்பதை வெளிப்படையாக போட்டு உடைத்து விட்டார். எந்நேரமும் பாவனி உடன் அன்பாக பேசும் அபிநயையும் அவர் அந்த லிஸ்ட்டில் சேர்க்கவில்லை. புதிதாக வந்த அமீர் மட்டுமே தனக்கு ஓரளவு ஒத்துப் போகிறார் என பாவனி பேசியதை கேட்ட பிறகும் அபிநய் அவருக்காக அடுத்த சீனிலேயே வந்து பேசினார் என நெட்டிசன்கள் நோட் பண்ணி கலாய்த்து வருகின்றனர்.

ராஜு டீமுக்கு ஐடியா
பிரியங்கா, அபிஷேக், சிபி அணி சூப்பரா அடுத்த அணியினரை டார்கெட் செய்து விளையாடி வருகின்றனர். நம்ம டீமில் பேசுவதற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தும் சும்மா காமெடி பண்ணிட்டு இருந்தா வொர்க்கவுட் ஆகாது என ராஜு டீமில் இருக்கும் பாவனி சூப்பர் ஐடியா கொடுத்து தனது ஆட்டத் திறமையை வெளிக்காட்டியது சிறப்பு என்றும் சேலையில் பாவனி செம அழகு என்றும் பாவனி ஆர்மியினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.