Exclusive : ரெட்டி டைரி என் வாழ்க்கை கதையல்ல.. ஆனால் : ஸ்ரீரெட்டி

ரெட்டி டைரி மற்றும் தனது வாழ்க்கை குறித்து நடிகை ஸ்ரீ ரெட்டி ஒன்இந்தியாவிடம் பகிர்ந்துகொண்டார்.

சென்னை: ரெட்டி டைரி தனது வாழ்க்கை வரலாற்று படம் இல்லை என நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு, ஏமாற்றியதாக முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மீது புகார் கூறிய அவர் தற்போது சென்னையில் செட்டிலாகி இருக்கிறார்.

சமீபத்தில் ரெட்டி டைரி என பெயரில் ஸ்ரீ ரெட்டியின் வாழ்க்கையை படமாக எடுக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் அவர் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ரெட்டி டைரி திரைப்படம் தனது வாழ்க்கை படம் அல்ல என்று ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒன்இந்தியாவுக்கு அவர் அளித்த பேட்டி:

சென்னையில் செட்டில்:

சென்னையில் செட்டில்:

நான் இப்போது சென்னையில் செட்டிலாகி இருக்கிறேன். வீடு கிடைப்பது தான் சிக்கலாக இருக்கிறது. நிரந்தரமாக ஒரு வீடு தேடி வருகிறேன். விரைவில் அமைந்துவிடும் என நம்புகிறேன்.

வாராகி புகார்:

வாராகி புகார்:

நடிகர் வாராகி மீது நான் அளித்த புகார் குறித்த போலீசார் எனது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்களிடம் நான் நடந்த விஷயங்களை பற்றி கூறினேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

என் கதையல்ல:

என் கதையல்ல:

இப்போது வாழ்க்கை ஓரளவுக்கு பரவாயில்லை. நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ரெட்டி டைரி படம் எனது பயோபிக் என சொல்லிகிறார்கள். அது உண்மையல்ல. பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களை பற்றிய படம் அது. அதில் நான் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறேன்.

விரைவில் அறிவிப்பு:

விரைவில் அறிவிப்பு:

மேலும் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளேன். அந்த படங்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். வாழ்க்கை மாறத் தொடங்கியிருக்கிறது. நல்ல எதிர்காலத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

ஏளனம்:

ஏளனம்:

கீர்த்தி சுரேஷ் பற்றி நான் வேண்டுமென்றே அவதூறு கூறவில்லை. அந்த விழாவில் விஷால் என்னை பற்றி பேசிய போது, கீர்த்தி சுரேஷ் சிரித்தது மிகக்கேவலமான செயல். என்னை போன்று பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஏளனம் செய்வது போல் இருந்தது.

சினிமா பின்னணி:

சினிமா பின்னணி:

கீர்த்தி சுரேஷின் குடும்பம் சினிமா பின்னணியை கொண்டது என்பதால், எளிதாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்துவிட்டன. அதனால் என்னை போன்ற பெண்கள் படும் கஷ்டத்தை அவரால் புரிந்துகொள்ள முடியாது. அந்த கோபத்தில் தான் அவர் பற்றி பதிவிட்டேன்.

தைரியம்:

தைரியம்:

எனக்கு நடந்த விஷயங்களை பற்றி தைரியமாக வெளியுலகத்துக்கு சொன்னேன். அதனால் பல பிரச்சினைகளை அனுபவித்தேன். ஆனால் இன்று என்னை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு, தனுஸ்ரீ தத்தா போன்றவர்கள் உண்மையை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அவருக்கு துணையாக நான் இருப்பேன்," என ஸ்ரீ ரெட்டி கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X