“வலிச்சா சொல்ல போது கோமதி“… டோலிவுட் செல்லும் 'டாக்டர்' புகழ் ரெடின் கிங்ஸ்லி!
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படத்தில் நம்மை வயிறு வலிக்க சிரிக்கவைத்த நகைக்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.
Recommended Video
கோலமாவு கோகிலா திரைப்படத்தில் அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி , ஜாக்பார்ட், கூர்க்கா, நெற்றிக்கண்,ஏ1 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இடியட், கோஷ்டி, வீட்டுல விஷேசங்க ஆர்ஜே பாலாஜியின் அடுத்தப் படம் என கிட்டத்தட்ட 10 படங்களில் கைவசம் வைத்துள்ளார்.

டாக்டர்
டாக்டர் படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் ரெடின் கிங்ஸ்லி. இப்படத்திற்கு முன் பலத்திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இத்திரைப்படம் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. இப்படத்தில் காமெடிக்கே உரித்தான ரைமிங் - டைமிங் நகைச்சுவை இல்லாமல், டாக்டர் படம் மூலம் வாய்மொழியால் ரசிகர்களை சிரிக்க வைத்தது.

ரெடின் கிங்ஸ்லி
நடிகர் ரெடின் கிங்ஸ்லி ஹைலைட் காமெடியே வலிச்ச சொல்லபோது கோமதி... கோமதிகா வலிச்சா சொல்லு என்ற வசனத்தை கேட்டு சிரிக்காதவர்களே இருக்கமுடியாது என்று சொல்லலாம். டாக்டர் படத்தை பார்த்தவர்கள் அனைவருமே ரெடினை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள் அவருக்கென்று ரசிகர்கள் ஆர்மி வைக்காத குறைதான். அந்தளவிற்கு, அவரைப்பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன.

முன்னணி நடிகர்களின் படங்களில்
டாக்டர் படத்தில் அவரின் காமெடி ஹிட் அடிக்க இப்போது முன்னணி நடிகர் களின் படங்களில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தில் நடித்து வரும் ரெடின் கிங்ஸ்லி அடுத்ததாக சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும், சிம்புவின் பத்து தல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அண்ணாத்த படத்திலும் நடித்திருந்தார்.

தெலுங்கில் அறிமுகம்
இந்நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் போதினேனி நடிக்கும் The Warrior திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். தற்போது அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ள காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் மூலம் இவர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாக போகிறார்

தி வாரியர்
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, ஆதி பினிசெட்டி, அக்ஷரா கவுடா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது, சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டர் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.


Click it and Unblock the Notifications











