பிளான் ரெடி.. ஜம்முனு ஹனிமூனை கொண்டாடும் ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடி!
சென்னை: ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா ஜோடி தங்களது ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.
46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார்.
பெங்களுரில் இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

நடிகை ரெடின் கிங்ஸ்லி: தூத்துக்குடியை பூர்வீகமாக கொண்ட ரெடின் கிங்ஸ்லி, நடிகர் மட்டுமில்லாமல் சொந்தமாக பொருட்காட்சிகளை நடத்தி வருகிறார். நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால், டான்ஸ் கற்றுக்கொண்ட இவர் அஜித், சிம்ரன் நடிப்பில் வெளியான அவள் வருவாளா என்ற படத்தில் 'ருக்கு ருக்கு ருக்கு மணி' என்ற பாடலில் க்ரூப் டான்ஸ் ஆடினார்.
கோலமாவு கோகிலா: அதன் பிறகு படவாய்ப்பு இல்லாததால், நீண்ட இடைவெளிக்கு பின் நயன்தாரா, யோகி பாபு நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது. இதைத்தொடந்து எல்.கே.ஜி., குர்கா, சந்தானத்தின் ஏ1, ஜாக்ப்பாட், நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்துள்ளார்.

முன்னணி நடிகர்களுடன்: குறிப்பாக டாக்டர் படம் இவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றிவிட்டது, இதையடுத்து,விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், வடிவேலுவுடன் நாய் சேகர் ரிடர்ன்ஸ், சந்தானத்துடன் டிடி ரிட்டர்ன்ஸ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.
ஹனிமூன் போட்டோஸ்: இதையடுத்து,தனது நீண்ட நாள் காதலியான நடிகை சங்கீதாவை ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார். திடீரென நடந்த அவரது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தாலும் இணையத்தில் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.தற்போது இந்த ஜோடி ஜாலியாக ஹனிமூன் கொண்டாட சென்றிருக்கும் போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகை சங்கீதா: ரெடின் கிங்ஸிலியின் மனைவி சங்கீதா, அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம், எங்க வீட்டு மீனாக்க்ஷி ஆகிய சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் வெள்ளித்திரையிலும், வீட்டுல விசேஷம், விசித்திரன், ஹே சினாமிகா, சுல்தான், பாரிஸ் ஜெயராஜ், கபடதாரி, மாஸ்டர், செவன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











