Redin Kingsley: ஒரே ரொமான்ஸ் மூடுதான்.. புது மனைவியுடன் காதலர் தின கொண்டாட்டமா?.. குவியுது லைக்ஸ்!

சென்னை: காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீரியல் மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் எளிமையான முறையில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய சினிமா நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

46 வயதில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி 45 வயதான சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு ஹனிமூனுக்கு சென்ற போட்டோக்கள் முதல் அடிக்கடி இருவரும் ரொமான்ஸ் மூடில் எடுத்துக் கொண்ட பல போட்டோக்களை சங்கீதா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

Redin Kingsley and Sangeetha shares romantic pics before Valentines Day


கோலமாவு கோகிலா முதல் ஜெயிலர் வரை: இயக்குநர் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி சிம்புவின் வேட்டை மன்னன் படத்தின் மூலம் அறிமுகமாக வேண்டியது. அந்த படம் டிராப் ஆன நிலையில், நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், பீஸ்ட் மற்றும் சூப்பர் ஸ்டார் நடித்த ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சங்கீதாவுடன் திருமணம்: சீரியலிலு சினிமாவிலும் சீனியர் நடிகையாக நடித்து வந்த சங்கீதாவும் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சிம்பிளாக மைசூரில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவர் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் எல்லாம் கொடுத்து அசத்திய சங்கீதா தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு கலக்கலான உடையில் இருவரும் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஜோடி சூப்பர்: ரெடின் கிங்ஸ்லி கருப்பு சட்டையில் கலக்கலாகவும் அவரது மனைவி சங்கீதா சிகப்பு கவுனில் சூப்பராகவும் இருக்கும் போட்டோக்களை அடுக்கி தங்களது ரொமான்ஸ் மூடு போட்டோக்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி உள்ளனர். ரெடின் கிங்ஸ்லி அடுத்து கவின் படத்தில் நடித்து வருகிறார். ஜெயிலர் 2விலும் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவியுது லைக்ஸ்: சங்கீதா தனது கணவர் ரெடின் கிங்ஸ்லியுடன் யூனிக்கான உடை மற்றும் நகைகளை அணிந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறோம் என போட்ட போஸ்ட்டுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. ஜெயிலர் முதல் காஞ்சுரிங் கண்ணப்பன் வரை என கடந்த ஆண்டு மட்டும் ரெடின் கிங்ஸ்லி 13 படங்களில் நடித்துள்ளார். இந்த ஆண்டும் பல படங்களில் பிசியாக உள்ளார். சீரியலில் தொடர்ந்து நடித்து வருகிறார் சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X