Redin Kingsley: ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்... மணக்கோலத்தில் மனைவியுடன் புதுமாப்பிள்ளை!

சென்னை: டாக்டர் படம் மூலம் பிரபலமான ரெடின் கிங்ஸ்லி, இப்போது முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருகிறார். இந்நிலையில், இன்று திருமணம் செய்துகொண்ட ரெடின் கிங்ஸ்லியின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Redin Kingsley: Comediy Actor Redin Kingsleys wedding photos are trending

ரெடின் கிங்ஸ்லிக்கு டும் டும் டும்
நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் பஹத் என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி. முன்னதாக கோலமாவு கோகிலா, எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தாலும், டாக்டர் தான் ரெடின் கிங்ஸ்லியை உச்சத்துக்கு கொண்டுச் சென்றது. இவர் இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாக்டர் படத்தின் வெற்றியால் ரெடின் கிங்ஸ்லிக்கு ஜாக்பாட் அடித்தது. அதனைத் தொடர்ந்து ரஜினியுடன் அண்ணாத்த, விஜய்யுடன் பீஸ்ட், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிம்புவுடன் பத்து தல, விஷாலுடன் மார்க் ஆண்டனி, கட்டா குஸ்தி உட்பட பல படங்களில் காமெடியில் கலக்கியுள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் திவ்யா என்ற கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரெடின் கிங்ஸ்லி, தற்போது லீடிங் காமெடி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இந்நிலையில், இன்று அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மணக்கோலத்தில் தனது மனைவியுடன் இருக்கும் ரெடின் கிங்ஸ்லியின் போட்டோஸ் வைரலாகி வருகின்றன.

டாக்டர் படத்துக்குப் பின்னரே நடிப்பில் பிஸியாகியுள்ளார். இதனால் அவருக்கு தாமதமாகவே திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ரெடின் கிங்ஸ்லிக்கு தற்போது வயது 46 என சொல்லப்படுகிறது. ரெடின் கிங்ஸ்லியின் மனைவி பெயர் சங்கீதா எனவும், அவர் பிரபல சீரியல் நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது. அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் சங்கீதா. அதேபோல் மாஸ்டர், பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடந்ததை அடுத்து திரை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். புதுமாப்பிள்ளை லுக்கில் ரெடின் கிங்ஸ்லி தனது மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X