குட் பேட் அக்லி படத்தில் இணைந்த சென்சேஷனல் பிரபலம்?.. வெளியான லேட்டஸ்ட் தகவல்

சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டு அஜர்பைஜானில் நடந்தது. அதற்கு பிறகு ஷுட்டிங் தொடங்கவில்லை. எனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க சென்றுவிட்டார் அஜித்குமார்.

அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திலிருந்து எந்த அப்டேட்டும் வராவிட்டாலும் படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் தொடங்கி நடந்து முடிந்தது. அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா வெளியிட்டிருந்தார். இதனால் படம் உயிர்ப்போடுதான் இருக்கிறது என்று அவரது ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.

Good Bad Ugly Ajith

அடுத்தக்கட்ட ஷூட்டிங்: அஜர்பைஜானில் ஷூட்டிங் முடிந்தாலும் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று தெரியாமல் அவரது ரசிகர்கள் குழம்பியிருந்தனர். மீண்டும் அஜர்பைஜானிலேயே ஷூட்டிங்கை நடத்த படக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகின. மேலும் படக்குழுவும் அங்கு செல்வதற்கான வேலைகளை லைகா தொடங்கியிருப்பதாகவும் கூறப்பட்டது. அதேசமயம் லைகாவுக்கு பண பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக விடாமுயற்சி ஷூட்டிங்கை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது.

குட் பேட் அக்லி: ஏகேவின் ரசிகர்கள் விடாமுயற்சி பற்றிய அப்டேட்டை எதிர்பார்த்திருந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காதவகையில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கி நடந்தது. இதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார் என்றும், நயன்தாராவை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

விறுவிறு ஷூட்டிங்: படமானது அடுத்த வருடம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே ஷூட்டிங்கும் மும்முரமாக நடந்துவருகிறது. ஹைதராபாத்தில் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து; அடுத்த ஷெட்யூலுக்காக படக்குழு ஜப்பான் செல்லலாம் என்றும்; அந்த ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி: அதன்படி இந்தப் படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதற்கு பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த ஷெட்யூல் ஷூட்டிங்கிலிருந்து அவர் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த மார்க் ஆண்டனி படத்தில் ரெடின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கும் என்றும்; ஒரே ஷெட்யூலில் மொத்த ஷூட்டிங்கையும் முடிக்க மகிழ் திருமேனி முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X