Redin Kingsley: ரெடின் கிங்ஸ்லி மனைவி யாருன்னு தெரியுமா... அட அவங்களும் பிரபலமான நடிகை தான?

சென்னை: தமிழில் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் ரெடின் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், அவரது மனைவி குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளன.

Redin Kingsley: Redin Kingsley is married to popular serial actress Sangeetha

ரெடின் கிங்ஸ்லி மனைவி யாருன்னு தெரியுமா?
சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கியவர் ரெடின் கிங்ஸ்லி. அதேபோல் குரூப் டான்ஸராகவும் சில பாடல்களில் நடனமாடியுள்ளார். குறிப்பாக அஜித்தின் அவள் வருவாளா படத்தில் இடம்பெற்ற 'ருக்கு ருக்கு' பாடலில் ஆடியுள்ளார். பின்னர் சினிமாவில் இருந்து ரெடின் கிங்ஸ்லியை மீண்டும் நடிக்க வைத்தது நெல்சன் தான்.

கோலமாவு கோகிலா படத்தில் நடிகராக அறிமுகமான ரெடின், எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் நடித்திருந்தார். ஆனால், நெல்சன் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இவர் அடித்த காமெடி லூட்டிகள் ரசிகர்களின் வயிற்றை பதம் பார்த்தது. அதன்பின்னர் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் காமெடியனாக வலம் வருகிறார் ரெடின் கிங்லி. இயக்குநர் நெல்சனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் முக்கியமான புள்ளி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், விஜய் சேதுபதி, சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து அதகளம் செய்துள்ளார் ரெடின் கிங்ஸ்லி. இந்நிலையில், மணக் கோலத்தில் தனது மனைவியுடன் இருக்கும் ரெடிங் கிங்ஸ்லியின் திருமண புகைப்படங்கள் வைரலாகின. 46 வயதான ரெடின் கிங்ஸ்லிக்கு தாமதமாகவே திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லியின் மனைவி பெயர் சங்கீதா எனவும், அவர் பிரபல சீரியல் நடிகை என்பதும் தெரியவந்துள்ளது. சன் டிவி உட்பட பிரபல தொலைக்காட்சிகளில் சீரியல் நடித்து பிரபலமானவர் சங்கீதா. அரண்மனைக்கிளி, திருமகள், ஆனந்த ராகம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார் சங்கீதா. அதேபோல் விஜய்யின் மாஸ்டர், சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம் போன்ற படங்களிலும் சின்ன கேரக்டரில் நடித்துள்ளாராம்.

ரெடின் கிங்ஸ்லி சினிமாவில் பிஸியாக இருக்க, அவரது மனைவி சங்கீதா சீரியலில் கலக்கி வருகிறார். இருவருமே திரையுலகில் பிரபலமானவர்கள் என்பதால், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமண வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X