அண்ணாத்த பட காமெடியனை நேரில் பாராட்டிய வைகைப் புயல் வடிவேலு!

சென்னை : காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி டாக்டர், அண்ணாத்த படங்களில் நடித்து வரவேற்பை பெற்றுள்ளார்.

முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு காமடியில் பின்னி பெடலெடுப்பது இவரது ஸ்டைல்.

இந்நிலையில் வைகைப்புயல் வடிவேலு தன்னை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததாக ரெடின் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

நடிகர் ரெடின் கிங்ஸ்லி

நடிகர் ரெடின் கிங்ஸ்லி டாக்டர், அண்ணாத்த ஆகிய படங்களில் தன்னுடைய சிறப்பான காமெடி மூலம் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளார். முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டு இவர் செய்யும் காமெடி அலப்பறைகள் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

டாக்டர் படம்

டாக்டர் படம்

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள படம் டாக்டர். சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். காமெடி கலாட்டாவாக வெளியானது இந்தப்படம்.

வரவேற்பை பெற்ற கிங்ஸ்லி

வரவேற்பை பெற்ற கிங்ஸ்லி

படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் ரெடின் கிங்ஸ்லி. முன்னதாக கோலமாவு கோகிலா, நெற்றிக்கண் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தாலும் டாக்டர் படத்தின்மூலம் இவரது கேரக்டர் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பார்வையாளர்களின் நாடித்துடிப்பை அறிந்து நெல்சன் தனது கேரக்டரை உருவாக்கியுள்ளதாக இவர் கூறியுள்ளார்.

அதிகமான வரவேற்பு

அதிகமான வரவேற்பு

டாக்டர் படம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று கருதியதாகவும் ஆனால் இத்தகைய அதிகமான வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நீளம் கருதி நிறைய காமெடி காட்சிகளை நெல்சன் தவிர்த்து விட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

கிங்ஸ்லியை பாராட்டிய வைகைப்புயல்

கிங்ஸ்லியை பாராட்டிய வைகைப்புயல்

இதனிடையே வடிவேலு நாயகனாக நடிக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் ரெடின் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது வடிவேலு தன்னை சந்தித்து பேசியதாகவும், தன்னுடைய கேரக்டர்களை அவர் பார்த்ததாகவும் அவை சிறப்பாக இருந்ததாக பாராட்டியதாகவும் ரெடின் மேலும் கூறியுள்ளார்.

வேட்டை மன்னன் படத்தில் காமெடி

வேட்டை மன்னன் படத்தில் காமெடி

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த வேட்டை மன்னன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடிக்க தான் ஒப்பந்தமாகியிருந்ததாகவும் ஆனால் அந்தப் படம் நிறுத்தப்பட்டதால், தான் வேறு வேலைக்கு சென்று விட்டதாகவும் ஆனால் நெல்சன் தன்னை விருப்பத்துடன் அழைத்து மீண்டும் டாக்டர் படத்தில் நடிக்க வைத்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X