பந்தா காட்டிய கிங்ஸ்லி... மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த வைகைப்புயல்
சென்னை : டாக்டர் படம் மூலம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளார் நடிகர் கிங்ஸ்லி.
Recommended Video
தொடர்ந்து அண்ணாத்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தாலும் சிறப்பான கவனத்தை பெற்றிருந்தார்.
இந்நிலையில் இவரது நடவடிக்கைகள் பந்தா காட்டும் வகையில் இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பு அதிருப்தியில் உள்ளதாம்.

நடிகர் வடிவேலு
நடிகர் வடிவேலு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் சூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்ற அவருக்கு கொரோனா பாதித்திருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம்
இந்தப் படத்தில் நாயகனாக நடித்து வரும் வடிவேலு, தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் காமெடி கேரக்டர்களிலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கென கதைகளை கேட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வடிவேலுவுடன் இணைந்த ரெடின் கிங்ஸ்லி
படத்தில் அவருடன் இணைந்து பல காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர். படத்தில் வடிவேலுவுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி அதிகமான காட்சிகளில் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்துள்ள காட்சிகளுக்காக படப்பிடிப்பு திட்டமிடப்பட்டிருந்தது.

சூட்டிங்கிற்கு தாமதமாக வந்த ரெடின்
இந்த சூட்டிங்கில் பங்கேற்க நடிகர் வடிவேலு முன்னதாகவே சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரெடின் கிங்ஸ்லி பல மணிநேரம் தாமதமாக படப்பிடிப்புக்கு வந்துள்ளார். அவர் வரும்வரை வடிவேலு பொறுமையாக காத்திருந்ததாக கூறப்படுகிறது.

பந்தா காட்டும் ரெடின் கிங்ஸ்லி?
அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வருவதால் ரெடின் கிங்ஸ்லியின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருப்பதாகவும் அதிகமான பந்தா காட்டி வருவதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. டாக்டர் படம் கொடுத்த அதீத வெற்றியே அவரது பந்தாவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் அதிருப்தி
ஒரு படம் வெற்றிப் பெற்றதால் இந்த அளவில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்படித்தான் நடிப்பேன் என்றும் அவர் கூறுவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வளர்ந்துவரும் நடிகர் இவ்வாறு நடந்து கொள்வது அவரது கேரியருக்கு சரியாக அமையாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











