கருமம்.. ப்ளடி பெக்கர் படத்துல கவின் பார்த்த வேலை.. மேடையில் புட்டு புட்டு வைத்த ரெடின் கிங்ஸ்லி!
சென்னை: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு போட்டியாக நேற்று நடைபெற்றது. வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் உடன் முதல் முறையாக நேரடியாக மோதுகிறார் கவின். டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன், அதில் ஹீரோவாக நடித்த சிவகார்த்திகேயன் மற்றும் ஹீரோயினாக நடித்த பிரியங்கா மோகன் என ஒரே படத்தில் பணியாற்றிய மூன்று பேர் மும்முனை போட்டியாக இந்த தீபாவளிக்கு களத்தில் சந்திக்க காத்திருக்கின்றனர்.
தீபாவளிக்கு 4 நாள் விடுமுறை இருக்கு. தமிழில் 3 படங்கள் தான் வெளியாகின்றன. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு படத்தை மக்கள் தியேட்டரில் பார்த்துக் கொண்டாடுங்க என டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவின் பேசினார்.

ஒரு படத்துக்கு குடும்பத்தை தியேட்டருக்கு கூட்டிட்டுப் போகவே மாசக் கடைசியில் காசு இருக்காது. இதுல, தினமும் ஒரு படம்னா பாப்கார்ன் விக்கிற விலைக்கு என ரசிகர்கள் புலம்பித் தீர்த்து வருகின்றனர்.
கவின் செட்டாகவே மாட்டார்: இயக்குநர் நெல்சன் தனது உதவி இயக்குநர் சிவபாலனுக்கு ஜெயிலர் படம் வெற்றியடைந்தால் நீ படம் பண்ண தயாரிக்கிறேன் என வாக்குறுதி கொடுத்த நிலையில், அவர் இந்த படத்துக்கு கவின் தான் செட்டாவார் என்று அழைத்து வர, பிசினஸ் ரீதியிலும், நடிப்பு ரீதியிலும் இந்த படத்துக்கு கவின் செட்டாகவே மாட்டான் என்று கூறியதாக நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே நெல்சன் பேசினார். ஆனால், படத்தை பார்த்து முடித்து விட்டு நான் சொன்னது தப்பு என உணர்ந்தேன். இந்த படத்துக்கு கவினை தவிர வேறு யாருமே செட்டாக மாட்டார்கள் என்று உணர்ந்துக் கொண்டேன் என்றும் நெல்சன் பேசி மனசுல இருந்ததை கொட்டிவிட்டு பின்னர் சமாளித்து சுபம் போட்டு விட்டார்.
மூக்கில் இருந்து சளி: பொதுவா க்ளிசரின் போடாமலே சில நடிகர்கள் கண்களில் இருந்து தண்ணி வரும். அதுதான் சிறப்பான நடிப்பு என்பார்கள். இந்த படத்தில் கவினுக்கு மூக்கில் இருந்து சளி வருது. அந்த அளவுக்கு பையன் நடிப்பில் பர்ஃபார்மன்ஸ் செய்திருக்கிறான். நிச்சயம் இந்த நடிப்புக்கு அடுத்த வருஷம் நிறைய அவார்டுகளை கவின் வாங்குவான் என ரெட்டின் கிங்ஸ்லி பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து விட்டது. அய்யோ போதும் வாய்யா என்கிற ரீதியில் கவின் ரியாக்ஷன் செய்து விட்டார்.
காமெடிக்கு கியாரண்டி: நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான டாக்டர் படம் போல கவினுக்கு இந்த படம் டார்க் காமெடி படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். லிப்ட், டாடா, ஸ்டார் என வளர்ந்து வரும் கவினுக்கு நிச்சயம் ப்ளடி பெக்கர் திரைப்படம் பெருசா கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 கோடி வருமா?: இதுவரை கவின் நடித்த படங்கள் 100 கோடி வசூல் வேட்டையை தொடவில்லை. 50 கோடி வசூல் வேட்டைக்கே திணறிக் கொண்டு தான் இருக்கின்றன. டாக்டர் படத்தை போல கவினுக்கு இது அமைந்தால் 100 கோடி தொடும் என்கின்றனர். சிவகார்த்திகேயனின் அமரன் போட்டியில் இருப்பதால் அது ரொம்ப டவுட்டு தான் என்றும் ஸ்டார் படத்தின் வசூலை முறியடிப்பது உறுதி என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











