Nelson Dilipkumar - வெற்றி வரும் போகும்; நெல்சன் மீது ஏன் இவ்வளவு வன்மம்.. கொட்டி தீர்த்த நடிகர்

சென்னை: Nelson Dilipkumar (நெல்சன் திலீப்குமார்) பீஸ்ட் படத்தை வைத்து விமர்சிக்கப்பட்ட சமயத்தில் நெல்சன் ரொம்பவே கஷ்டப்பட்டார் என்று நடிகர் ரெடின் கிங்ஸ்லி தெரிவித்திருக்கிறார்

நெல்சன் திலீப்குமார் இதுவரை நான்கு படங்களை இயக்கியிருக்கிறார். இவற்றில் கோலமாவு கோகிலா அவரது முதல் படமாகும். முதல் படத்திலேயே ஹீரோயினை மையப்படுத்திய சப்ஜெக்ட்டை எடுத்து கோலிவுட்டில் கவனம் பெற்றார். அதேபோல் டார்க் காமெடி என்ற ஜானரையும் அவர் சரியாக பயன்படுத்தி பலரையும் சிரிக்க வைத்தார்.

Redin Kingsley Talks about Nelson Dilipkumar

டார்க் காமெடி: கோலமாவு கோகிலா படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். நெல்சன் படம் முழுக்க சிவகார்த்திகேயனை சிரிக்க வைக்காமல் ரசிகர்களை சிரிக்க வைத்தார். படம் 100 கோடி ரூபாய் வசூல் அடித்தது. சிவகார்த்திகேயன் படங்களிலேயே முதன்முறையாக டாக்டர் படம்தான் 100 கோடி ரூபாய்க்கு கிளப்பில் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோலமாவு கோகிலாவும், டாக்டரும் மெகா ஹிட் அடித்ததால் மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

பீஸ்ட்: நெல்சனின் டார்க் காமெடி விஜய்யின் நடிப்பு ஆகியவை இணைந்து படம் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து இருந்தனர். படத்தைப் பார்த்த ரசிகர்களோ தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றும் நெல்சன் திலீப்குமார் தங்களை ஏமாற்றி விட்டார் என்றும் இந்த படைப்புக்கா இவர் இவ்வளவு பேச வேண்டும் என்றும் கொஞ்சம் ஓவராகவே நெல்சனை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இருந்தாலும் நெல்சன் திலீப்குமார் அதற்கெல்லாம் எந்த விதமான ரியாக்ட்டும் செய்யாமல் அமைதியாகவே இருந்தார்.

Redin Kingsley Talks about Nelson Dilipkumar

ஜெயிலர்: பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதே ஜெயிலர் படத்தில் கமிட்டானார் நெல்சன். படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் மூலம் ரஜினிக்கும் கம்பேக் கொடுத்து இவரும் கம்பேக் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதுவரை உலக அளவில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

ரெடின் கிங்ஸ்லி பேட்டி: இந்நிலையில் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ரெடின் கிங்ஸ்லி தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் அந்த பேட்டியில் பேசிய அவர் , "ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் மகிழ்ச்சியாக இருக்கிறார். பீஸ்ட் படத்தின் ரிசல்ட்டை வைத்து அவரை கடுமையாக விமர்சித்தனர். அதனால் அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். வெற்றி தோல்வி அனைவரது வாழ்க்கையிலும் வரும் போகும். ஆனால் நெல்சன் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X