காலேஜ் படிக்கும்போது ரெடின் கிங்ஸ்லி தான் எனக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தார்!

சென்னை : கோலமாவு கோகிலா மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் நெல்சன் திலிப்குமார்

டாக்டர் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தை தற்போது இயக்கி உள்ளார்

பீஸ்ட் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று வசூலை குவித்து வரும் நிலையில் தன்னுடன் முதல் படத்திலிருந்தே பயணித்துக் கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி கல்லூரியில் தனக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவர் என்ற உண்மையை பகிர்ந்துள்ளார்.

நயன்தாராவின் இயல்பான நடிப்பு

நயன்தாராவின் இயல்பான நடிப்பு

நடிகை நயன்தாரா குடும்ப சூழ்நிலை காரணமாக போதை பொருள் கடத்தும் நபராக நடித்த திரைப்படம் கோலமாவு கோகிலா. மிகவும் வித்தியாசமான கதைக் களத்தில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. நயன்தாராவின் இயல்பான நடிப்பு யோகி பாபுவின் காமெடி வேற லெவலில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. கோலமாவு கோகிலா படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் நெல்சன். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நெல்சன் அதன் பிறகு தன்னுடைய நீண்ட நாள் நண்பரான சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கினார்.

சிவகார்த்திகேயனை குறைவாக பேச வைத்து

சிவகார்த்திகேயனை குறைவாக பேச வைத்து

பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே கலகலப்பாக இருக்கும் குறிப்பாக சிவகார்த்திகேயன் அனைவரையும் கலாய்க்கும் காமெடி ஒவ்வொரு படத்திலும் இடம் பெற்றிருக்கும். ஆனால் அது போன்ற எந்த ஒரு காட்சியும் டாக்டர் படத்தில் இடம் பெறக் கூடாது என்பதை முடிவு செய்தனர் நெல்சன் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனை மிகக் குறைவாகவே பேச வைத்திருப்பார். சிவகார்த்திகேயனை புதுமையான ரசிகர்களும் அதனை வரவேற்றனர். சிவகார்த்திகேயன் ,பிரியங்கா அருள்மோகன் யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி என பலர் நடித்திருந்த டாக்டர் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

ரெடின் கிங்ஸ்லி உடனான நட்பு

ரெடின் கிங்ஸ்லி உடனான நட்பு

கோலமாவு கோகிலா,டாக்டர் என இரண்டுமே மாபெரும் வெற்றிபெற்ற நிலையில் நெல்சன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக ஆனார். அதுமட்டுமல்லாமல் நெல்சனின் தனித்துவமான மேக்கிங் அனைத்து ஹீரோக்களையும் கவர்ந்தது இந்த நிலையில் விஜய் உடன் கூட்டணி அமைத்த பீஸ்ட் இப்பொழுது ஹாட்ரிக் வெற்றி படமாக அமைந்துள்ளது. கோலமாவு கோகிலா முதல் பீஸ்ட் வரை அனைத்து படங்களிலும் ரெடின் கிங்ஸ்லி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Recommended Video

Idiot படம் வெளிவருமா? லொள்ளு சபா ராம் பாலா | Mirchi Shiva | Filmibeat tamil
காலேஜில் எனக்கு டான்ஸ் மாஸ்டர்

காலேஜில் எனக்கு டான்ஸ் மாஸ்டர்

இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி உடனான நட்பு குறித்து பேசிய நெல்சன் தான் கல்லூரியில் படிக்கும்போது டான்ஸ் மாஸ்டராக இருந்தாராம்.ரெடின் கிங்ஸ்லி அதுமட்டுமில்லாமல் நெல்சன் ஆறாவது வகுப்பு படிக்கும் போது ரெடின் கிங்ஸ்லி பள்ளியில் நடந்த விழாக்களில் பர்ஃபார்ம் செய்துள்ளார். ரெடின் கிங்ஸ்லிக்கும் தனக்கும் கிட்டத்தட்ட முப்பது வருட பழக்கம் இருப்பதாக நெல்சன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X