பெண் குழந்தையுடன் ஆட்டம் போட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி.. கமெண்ட் பக்கம் தயவு செஞ்சு பார்த்திடாதீங்க!

சென்னை: காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண புகைப்படங்கள் மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள் என அடுத்தடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷ தருணங்களை சங்கீதா மற்றும் ரெடின் கிங்ஸ்லி பதிவிட்டு வருகின்றனர்.

கோலமாவு கோகிலா, எல்கேஜி, டாக்டர், நெற்றிக்கண், பீஸ்ட், ஜெயிலர், டிடி ரிட்டன்ஸ், 80இஸ் பில்டப் என பல படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார்.

சமீபத்தில், மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் நடிகை சங்கீதாவை ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்து கொண்ட நிலையில், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். சின்னத்திரை மற்றும் சினிமாவில் சிறு வேடங்களில் நடித்து வந்த சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் குழந்தையுடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Redin Kingsley wife Sangeetha dancing Kaavaala song with her brother daughter video trending

இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாதா: கோலமாவு கோகிலா படத்திலிருந்து வித்தியாசமான காமெடி கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறார். டாக்டர் படத்தில் இயக்குநர் நெல்சன் ரெட்டின் கிங்ஸ்லியை முழுவதுமாக பயன்படுத்தி இருப்பார். ஸ்கூல் யூனிபார்ம் போட்டுக்கொண்டு பெண் போல அவர் வேடமிட்டு செல்லும் காட்சிகளும், இந்த மூஞ்சி எல்லாம் வியாபாரம் ஆகாதா என பேசும் டயலாக்கும் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் திவ்யா எனும் கே கதாபாத்திரத்தில் அவர் போல்டாக நடித்திருப்பார். டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் கிளைமேக்ஸில் 3வது பார்ட்டில் பேயாக வந்து தொல்லை பண்ணுவேன் என ரெடின் கிங்ஸ்லி சொல்ல, இதுவே 3வது பார்ட் தான் நாங்க தான் டிடி ரிட்டர்ன்ஸ்னு வச்சிருக்கோம் என சந்தானம் கவுன்ட்டர் கொடுத்திருப்பார்.

ரெடின் கிங்ஸ்லி திருமணம்: இப்பவே கல்யாணம் பண்ணிக்கோங்க இல்லைனா நேரடியா 60ம் கல்யாணம் தான் பண்ண வேண்டும் என ரெடின் கிங்ஸ்லியின் நண்பர்கள் கலாய்த்து வந்த நிலையில், தனது காதலி சங்கீதாவும் விருப்பப்பட்ட உடனே திருமணத்தை செய்து கொண்டார் ரெடின் கிங்ஸ்லி. எளிமையான முறையில் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் ரெடிம் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் திருமணம் கடந்த டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெற்றது.

காவாலா பாட்டுக்கு டான்ஸ்: மாஸ்டர், பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சங்கீதா நடிகர் ரெடின் திருமணம் செய்து கொண்ட நிலையில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவ் ஆகி வருகிறார். திருமணம் மற்றும் ஹனிமூன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த அவர், தற்போது பெண் குழந்தையுடன் ஜெயிலர் படத்தின் காவாலா பாட்டுக்கு நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

யார் குழந்தை: அந்த போஸ்ட்டிலேயே தனது அண்ணன் மகளுடன் காவாலா பாட்டுக்கு டான்ஸ் ஆடுறேன் என சங்கீதா தெளிவாக குறிப்பிட்ட நிலையில், நெட்டிசன்கள் பலரும் அந்த குழந்தை உங்களுடைய குழந்தையா என கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், இப்போதான் திருமணம் ஆனது அதற்குள் இவ்வளவு பெரிய மகளா என்றும் மோசமான பதிவுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X