ரெடின் கிங்ஸ்லி வீட்டில் விசேஷம்.. சங்கீதா வெளியிட்ட சூப்பர் வீடியோ.. குவியும் வாழ்த்து
சென்னை: ரெடின் கிங்ஸ்லி இப்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது உடல்மொழியும், டயலாக் டெலிவிரியும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கின்றன. கடைசியாக அவரது நடிப்பில் கங்குவா, ப்ளடி பெக்கர் உள்ளிட்ட படங்கள் வந்தன. அவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சூழல் இப்படி இருக்க தான் கர்ப்பமாக இருப்பதாக சங்கீதா வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சினிமாவில் நடன குழுவில் குரூப் டான்ஸராக தனது திரை பயணத்தை ஆரம்பித்தவர் ரெடின் கிங்ஸ்லி. அதற்கு பிறகு நடன பள்ளி ஒன்றையும் வைத்து சினிமாவுக்குள் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் நெல்சன் திலீப்குமார் கல்லூரி படிக்கும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் நெல்சனுடன் ரெடினை நெருக்கமாக்கியது. மேலும் நெல்சன் இயக்கி பாதியில் கைவிடப்பட்ட படமான சிம்பு நடித்த வேட்டை மன்னன் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார் ரெடின் கிங்ஸ்லி

கோலமாவு கோகிலா: அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நயன்தாரா, யோகிபாபு கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அதில் நடித்த ரெடின் கிங்ஸ்லி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். இருந்தாலும் அவருக்கு புகழ் வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம்தான். அந்தப் படம் மெகா ஹிட்டடித்து 100 கோடி ரூபாயை வசூல் செய்தது.
தொடர்ந்து வாய்ப்புகள்: டாக்டர் படத்துக்கு பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திவருகிறார் ரெடின். எனவே கோலிவுட்டில் இப்போது குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ப்ளடி பெக்கர், கங்குவா திரைப்படங்கள் வெளியாகின. அடுத்ததாக அவரது நடிப்பில் பல படங்கள் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ரெடினுக்கு திருமணம்: இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது மைசூரில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. முக்கியமாக ரெடினுக்குள் இப்படி ஒரு காதல் முகமா என்று நெல்சனே ஆச்சரியப்பட்டார். அதை அவரே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
கர்ப்பமான சங்கீதா: இந்நிலையில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்து அவர் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. சூழல் இப்படி இருக்க தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அழகான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார். அந்த வீடியோவில் ரெடின் கிங்ஸ்லியும் இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அந்த தம்பதிக்கு தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











