கல்யாணமே நடக்குமான்னு பயந்தேன்.. வீட்ல வச்சு பூட்டிட்டுப் போயிட்டாரு.. ரெடின் கிங்ஸ்லி மனைவி ஓபன்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் வெளியான கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துக் கொண்டார்.
ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவின் வயதை வைத்து ஏகப்பட்ட ட்ரோல்கள், மீம்கள் சோஷியல் மீடியாவில் மோசமாக குவிந்தாலும், ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் ஆகிடுச்சே என்கிற சந்தோஷத்தில் சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரெடின் கிங்ஸ்லி எந்தளவுக்கு கஞ்சன், தனது திருமணம் பிளடி பெக்கர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே எப்படி நடைபெற்றது உள்ளிட்ட பல விஷயங்களை சங்கீதா ஷேர் செய்துள்ளார்.
காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி: இயக்குநர் நெல்சனின் நண்பரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராகவே மாறிவிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் நடித்து வரும் பிளடி பெக்கர் படத்திலும் அவர் நடித்து வரும் நிலையில், தனது திருமணத்தையே அந்த படட்தின் ஷூட்டிங்கில் செய்து முடித்துள்ளார்.
கல்யாணம் ஆகுமான்னே டவுட்டு: நவம்பர் மாதம் திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்ததும் அந்த மாதம் முழுவதும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தேன். அதனால், பிளடி பெக்கர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே திருமணம் செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்தோம் என்றார் ரெடின் கிங்ஸ்லி. நள்ளிரவு 1 மணி வரை ஷூட்டிங்கில் இருந்தார். திருமணத்துக்கு தேவையான தாலி, டிரெஸ், மாலை என அனைத்துமே வாங்கி வைத்துக் கொண்டு திருமணத்துக்கு வருவாரா? மாட்டாரா? திருமணம் நடக்குமோ நடக்காதோ என பயந்துக் கொண்டு இருந்ததாக ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா கூறியுள்ளார்.

சரியான கஞ்சன்: திருமணம் ஆன பிறகு 6 மாதங்கள் கழித்து வெளியே சென்று இருந்தோம். ஹோட்டல் ஒன்றுக்கு சென்ற போது ஒரே ஒரு டீ ஆர்டர் பண்ணிக் கொடுக்கிறார். மனைவியாக அருகே நான் ஒருத்தி இருப்பதையே மறந்து விட்டார் என பங்கமாக கலாய்த்து விட்டார்.
வீட்ல வச்சி பூட்டிட்டார்: ஒரு நாள் அப்படித்தான் வீட்ல நான் இருப்பதையே மறந்து உள்ள வச்சி பூட்டிட்டுப் போய்விட்டார் என்றும் ரெடிங் கிங்ஸ்லியின் திருமணத்துக்குப் பிந்தைய அலப்பறைகளை புட்டு புட்டு வைத்துள்ளார் சங்கீதா. அதற்கெல்லாம் அசால்ட்டாக நான் இன்னமும் பேச்சுலராக இருப்பதாகவே நினைச்சிட்டு இருக்கேன் என பதில் கொடுத்து ரெடின் கிங்ஸ்லி ஸ்கோர் செய்துள்ளார். வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ள கவினின் பிளடி பெக்கர் படத்திலும் ரெட்டின் கிங்ஸ்லியின் காமெடிகள் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளந்தியான மனுஷன்: ஏகப்பட்ட ட்ரோல்கள் திருமணத்தையும் அவரது வயதையும் சுட்டிக் காட்டி வந்தாலும், சோஷியல் மீடியாவில் ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வான். அதையெல்லாம் பார்த்துக் கொண்டு நாம் நம் சந்தோஷத்தை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என கமெண்ட் பக்கமே பார்க்க வேண்டாம் என்று சொல்லி விடுவார் என்றும் தனது கணவர் பற்றி சங்கீதா சூப்பராக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











