ரெடின் கிங்ஸ்லி வீட்டில் குட் நியூஸ்.. சங்கீதாவும் செம ஹேப்பி.. குவியும் வாழ்த்து

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போது குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. அடிப்படையில் அவர் நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு நெருக்கமான நண்பராக இருக்கும் அவருக்கு டாக்டர் திரைப்படம் நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதனையடுத்து வரிசையாக அவர் படங்களில் நடித்துவருகிறார். இதற்கிடையே அவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

சினிமாவில் குரூப் டான்ஸராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் ரெடின் கிங்ஸ்லி. அஜித், விஜய் உள்ளிட்டோரின் பாடல்களில் அவரை 90களில் அடிக்கடி பார்க்கலாம். அதற்கு பிறகு நடன பள்ளி ஒன்றையும் வைத்து சினிமாவுக்குள் தொடர்ந்து பயணிக்க ஆரம்பித்தார். அந்த சமயத்தில் நெல்சன் திலீப்குமார் கல்லூரி படிக்கும்போது அவருடன் பழக்கம் ஏற்பட்டது. சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் தனது முதல் படமான வேட்டை மன்னன் படத்தை இயக்கியபோது அதில் நடித்தார். ஆனால் அந்தப் படம் ட்ராப்பாகிவிட்டது.

redin kingsley sangeetha

டாக்டர்: பிறகு கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அதில் நடித்த ரெடின் கிங்ஸ்லி முதல் படத்திலேயே கவனத்தை ஈர்த்தார். இருந்தாலும் அவருக்கு புகழ் வெளிச்சத்தை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது சிவகார்த்திகேயனை வைத்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படம்தான். அந்தப் படம் மெகா ஹிட்டடித்து 100 கோடி ரூபாயை வசூல் செய்தது. அதனையடுத்து வரிசையாக ரெடினுக்கு வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் எல்கேஜி படத்திலும் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

வரிசையாக வாய்ப்புகள்: தொடர்ந்து தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தினார். எனவே கோலிவுட்டில் இப்போது குறிப்பிடத்தக்க நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ப்ளடி பெக்கர் திரைப்படம் வெளியானது. அதில் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார். நடிப்பு மட்டுமின்றி தான் கொடுக்கும் பேட்டிகளில் நெல்சனுடன் அவர் செய்யும் அலப்பறைகளும் வெகுவாக ரசிக்க வைக்கும்.

ரெடினுக்கு திருமணம்: சூழல் இப்படி இருக்க அவர் திருமணம் செய்யாமல் 40 வயதுவரை வாழ்ந்தார். இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சில வருடங்களுக்கு முன்பு நடிகை சங்கீதாவை காதலித்து சிம்ப்பிளாக திருமணம் செய்துகொண்டார். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது மைசூரில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

குட் நியூஸ்: இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா குறித்து குட் நியூஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. முன்னதாக சங்கீதாவுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது தனது குழந்தை இல்லை தனது சகோரியின் குழந்தை என்று சங்கீதா விளக்கமளித்து அந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X