Redin Kingsley: டைட்டானிக் Jack ஸ்டைலில் மாறிய ரெடின் கிங்ஸ்லி... சங்கீதா மட்டும் சும்மாவா என்ன..?
சென்னை: பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா தம்பதியினர் ஹனிமூன் சென்று வந்தனர். இந்நிலையில் நியூ இயர் ஸ்பெஷலாக இருவரும் ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.
டைட்டானிக் Jack ஸ்டைலில் ரெடின் கிங்ஸ்லி
தமிழில் முன்னணி காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தனது பயணத்தைத் தொடங்கிய ரெடின் கிங்ஸ்லி, தற்போது படு பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். கோலமாவு கோகிலா, எல்கேஜி, கூர்கா போன்ற படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருந்தாலும், நெல்சன் இயக்கிய டாக்டர் மூவி தான் ரெடினுக்கு சிறப்பான அறிமுகம் கொடுத்தது.

இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினி, தளபதி விஜய், விஜய் சேதுபதி, சிம்பு, விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ரெடின் கிங்ஸ்லிக்கு திருமணம் நடைபெற்றது. அதன்படி, 46 வயதான ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார். சன் டிவி உட்பட பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சங்கீதா.
சீரியல் நடிகையாக மட்டும் இல்லாமல், படங்களிலும் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்துள்ளார் சங்கீதா. விஜய்யின் மாஸ்டர், சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ், வீட்ல விஷேசம் போன்ற படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா தம்பதியினர் ஜோடியாக எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது. அதில், டைட்டானிக் ஜேக் ஸ்டைலில் ரெடின் கிங்ஸ்லியும், ரோஸ் லுக்கில் சங்கீதாவும் போஸ் கொடுத்துள்ளனர்.
கூலர்ஸ் அணிந்தபடி சங்கீதாவை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டிருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி. இந்தப் போட்டோவில் இருவருமே செம்ம ஸ்டைலிஷாக உள்ளனர். முன்னதாக ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா ஜோடி ஹனிமூன் சென்றிருந்த போதும் வெரைட்டி வெரைட்டியாக போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தனர். அதேபோல் இப்போது நியூ இயர் ஸ்பெஷலாக போட்டோ ஷூட் எடுத்துள்ளனர்.
படத்தில் காமெடியனாக இருந்தாலும் மனைவியுடன் இருக்கும் போது ஹாலிவுட் ஹீரோ ஸ்டைலில் கெட்டப்பை மாற்றி ரெடின் கிங்ஸ்லி மாஸ் காட்டி வருவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











