Redin Kingsley: ரெடின் கிங்ஸ்லி மனைவியின் லேட்டஸ்ட் வீடியோ.. ரிசப்ஷனுக்கு ரெடியாகிட்டாரா?
சென்னை: நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சமீபத்தில் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி கோயிலில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.
46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி 45 வயதான சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், சங்கீதா ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவருக்கு ஒரு மகள் உள்ளார் என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், திருமணத்துக்கு பிறகு ஹனிமூனுக்கு சென்ற போட்டோக்களை வெளியிட்டு வந்த இந்த புதுமண தம்பதியினர் தற்போது ரிசப்ஷனுக்கு ரெடியாவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளனர்.

செகண்ட் மேரேஜ்: திடீரென தமிழ் சினிமாவில் செகண்ட் மேரேஜ் டிரெண்ட் ஆரம்பித்து விட்டது போல தெரிகிறது. ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவையும் ஆதிக் ரவிச்சந்திரன் மணந்துள்ளார். சங்கீதாவை போலவே ஐஸ்வர்யாவும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரிஷப்ஷனுக்கு ரெடியா?: எளிமையான முறையில் மைசூரில் திருமணம் செய்துக் கொண்ட ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதா தம்பதியினர் கூடிய விரைவிலேயே சினிமா பிரபலங்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், நீல நிற லெஹங்கா உடையில் சங்கீதா செம க்யூட்டாக ரெடியாகும் வீடியோ ஒன்று லேட்டஸ்ட்டாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெயிட் பார்ட்டி: கோலமாவு கோகிலா படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமான ரெடின் கிங்ஸ்லி தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் வெளியான டாக்டர், பீஸ்ட் மற்றும் இந்த ஆண்டு வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ள ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவை தாண்டி தொழிலிலும் அவர் வெயிட் பார்ட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்: கடந்த சில ஆண்டுகளாகவே சங்கீதாவும் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து வந்த நிலையில், திடீரென சங்கீதா திருமணம் செய்துக் கொள்ளலாம் என சொன்னதுமே ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துக் கொண்டாராம். மேலும், கடந்த ஓராண்டாக இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கையும் வாழ்ந்து வந்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











